Aandava Modsagathi Naayagane - ஆண்டவா மோட்சகதி நாயனே - Christking - Lyrics

    Aandava Modsagathi Naayagane - ஆண்டவா மோட்சகதி நாயனே


    ஆண்டவா மோட்சகதி நாயனே
    மீண்டவா பாவிக் கிரங்கையனே

    நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவா
    தாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே

    பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே
    சித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே

    பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட
    ஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே

    பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயே
    ஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே

    கொல்கதா மலையிலே குருசினில் தொங்கையிலே
    பொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே

    பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே
    கோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா


    Aanndavaa Motchakathi Naayanae
    Meenndavaa Paavik Kirangaiyanae

    Neennda Aayulullavaa Nerimarai Koduththavaa
    Thaannti Ulakil Vanthaayae Thayaalamulla Yaesuvae

    Peththalaeka Moorilae Pillaiyaayp Piranthaayae
    Siththam Vaiththirangamaattayo Thaevaseela Mainthanae

    Paaviyaana Manushi Un Paathamuththi Seythida
    Jeevavaakkuraikkavillaiyo Thaettal Seyyum Meetparae

    Paethaliththa Seemonaip Paenni Mukam Paarththaayae
    Aatharavunee Thaan Allavo Arumaiyulla Appanae

    Kolkathaa Malaiyilae Kurusinil Thongaiyilae
    Pollaarukkirangavillaiyo Porumaiyulla Thaevanae

    Paavavinai Theerkkavae Paadu Mikap Pattayae
    Kopaminti Ennai Nnokkaayo Kurusil Araiyunndavaa

    Aandava Modsagathi Naayagane - ஆண்டவா மோட்சகதி நாயனே Aandava Modsagathi Naayagane - ஆண்டவா மோட்சகதி நாயனே Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
    Powered by Blogger.