Aananthap Paadalkal Paadiduvaen - ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் - Christking - Lyrics

    Aananthap Paadalkal Paadiduvaen - ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்


    ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
    எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
    அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
    மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே

    1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
    அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
    உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
    பிழைத்திடவே அன்பர் சமூகமதில் — ஆனந்த

    2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
    இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
    பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
    பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே — ஆனந்த

    3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
    என் பிதா ஆனதால் ஆனந்தமே
    ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
    மாறாமல் பதில் தரும் மன்னனிடம் — ஆனந்த

    4. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
    பூலோக நாட்டமும் குறைகின்றதே
    மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
    காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் — ஆனந்த

    5. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
    போர்பரன் சேவையின் பாக்யமது
    பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
    கற்புடன் அவர் பனி செய்திடவே — ஆனந்த

    6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – எந்தன்
    நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
    காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
    விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம் — ஆனந்த


    Aananthap Paadalkal Paadiduvaen
    Enthan Aaththuma Naesaraip Pukalnthiduvaen
    Alaichchalkal Yaavaiyum Akalach Seythae – Nal
    Maeychchalil Enthanai Makilach Seythae

    1. Alaiththavarae Avar Unnmaiyullor – Tham
    Alaippathil Vilippudan Niruththa Vallor
    Ulaiththiduvaen Mika Ookkamudan – Angu
    Pilaiththidavae Anpar Samookamathil — Aanantha

    2. Nampikkai Attanaay Alaintha Vaelai
    Yesunaathar Enpakkamaay Vanthanarae
    Paavangal Paarangal Parakkach Seythae – Inthap
    Paarinil Ennai Vetti Sirakkach Seythae — Aanantha

    3. Jepamathai Kaetdidum Jeevanulla – Thaevan
    En Pithaa Aanathaal Aananthamae
    Aeraெduppom Nam Ithayamathai – Entum
    Maaraamal Pathil Tharum Mannanidam — Aanantha

    4. Maeloka Naadenthan Sonthamathae – Intha
    Pooloka Naattamum Kuraikintathae
    Maayaiyil Manamini Vaiththidaamal – Naesar
    Kaayamathai Ennnni Vaalnthiduvaen — Aanantha

    5. Arputhamaam Avar Naesamathu – Enthan
    Porparan Sevaiyin Paakyamathu
    Parpala Kirupaikal Pakarukintar – Aelai
    Karpudan Avar Pani Seythidavae — Aanantha

    6. Parama Thaesam Kannnnil Therikirathae – Enthan
    Naatharin Thoni Kaathil Kaetkintathae
    Kaalam Ini Illai Unarnthiduvom
    Viraivaaka Nam Ottaththil Odiduvom — Aanantha

    Aananthap Paadalkal Paadiduvaen - ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்  Aananthap Paadalkal Paadiduvaen - ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
    Powered by Blogger.