Aandavar Padaitha Vetriyin Naalithu - ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது - Christking - Lyrics

    Aandavar Padaitha Vetriyin Naalithu - ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது


    ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
    இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
    அல்லேலூயா பாடுவோம்
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு

    1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
    என் பக்கம் இருக்கிறார்
    உலக மனிதர்கள் எனக்கு எதிராக
    என்ன செய்ய முடியும்
    தோல்வி இல்லை எனக்கு
    வெற்றி பவனி செல்வேன்
    தோல்வி இல்லை நமக்கு
    வெற்றி பவனி செல்வோம்

    2. எனது ஆற்றலும் எனது பாடலும்
    எனது மீட்புமானார்
    நீதிமான்களின் (கூடாரத்தில்) சபைகளிலே
    வெற்றி குரல் ஒலிக்கட்டும்

    3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
    மூலைக்கல் ஆயிற்று
    கர்த்தர் செயல் இது அதிசயம் இது
    கைத்தட்டிப் பாடுங்களேன்

    4. என்றும் உள்ளது உமது பேரன்பு
    என்று பறைசாற்றுவேன்
    துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன்
    துணையாய் வந்தீரையா


    Aanndavar Pataiththa Vettiyin Naalithu
    Intu Akamakilvom Akkalippom
    Allaelooyaa Paaduvom
    Allaelooyaa Tholvi Illai
    Allaelooyaa Vetti Unndu

    1. Enakku Uthavidum Enathu Aanndavar
    En Pakkam Irukkiraar
    Ulaka Manitharkal Enakku Ethiraaka
    Enna Seyya Mutiyum
    Tholvi Illai Enakku
    Vetti Pavani Selvaen
    Tholvi Illai Namakku
    Vetti Pavani Selvom

    2. Enathu Aattalum Enathu Paadalum
    Enathu Meetpumaanaar
    Neethimaankalin (Koodaaraththil) Sapaikalilae
    Vetti Kural Olikkattum

    3. Thallappatta Kal Kattidam Thaangidum
    Moolaikkal Aayittu
    Karththar Seyal Ithu Athisayam Ithu
    Kaiththattip Paadungalaen

    4. Entum Ullathu Umathu Paeranpu
    Entu Paraisaattuvaen
    Thunpa Vaelaiyil Nnokki Kooppittaen
    Thunnaiyaay Vantheeraiyaa

    Aandavar Padaitha Vetriyin Naalithu - ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது Aandavar Padaitha Vetriyin Naalithu - ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது Reviewed by Christking on July 05, 2020 Rating: 5
    Powered by Blogger.