Aatham Purintha Pavathale - ஆதம்புரிந்த பாவத்தாலே - Christking - Lyrics

    Aatham Purintha Pavathale - ஆதம்புரிந்த பாவத்தாலே


    ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி
    வேதம் புரிந்த சிறை விடுவித்தீரோ பரனே

    ஏவை பறித்த கனியாலே விளைந்த எல்லாப்
    பாவத்துக்காகப் பழியானீரோ பரனே

    வேத கற்பனையனைத்தும் மீறிநரர் புரிந்த
    பாதகந் தீரப்பாடுபட்டீரோ பரனே

    தந்தைப் பிதாவுக் கும்மைத் தகனப்பலியளித்து
    மைந்தரை மீட்கமனம் வைத்தீரோ பரனே

    சிலுவை சுமைபொறாமல் தியங்கித் தரையில் விழக்
    கொலைஞர் அடர்ந்து கோட்டி கொண்டாரோ பரனே

    வலிய பாவத்தை நீக்கி மனுடரை ஈடேற்றிச்
    சிலுவை சுமந்திறங்கித் திகைத்தீரோ பரனே

    சென்னியில் தைத்தமுடிச்சிலுவையின் பாரத்தினால்
    உன்னியழுந்தத் துயர் உற்றீரோ பரனே

    வடியும் உதிரமோட மருகித் தவித்துவாடிக்
    கொடிய குருசில் கொலையுண்டீரோ பரனே

    வானம் புவிபடைத்த வல்லமைப் பிதாவின் மைந்தர்
    ஈனக்கொலைஞர் கையாலிறந்தீரோ பரனே

    சங்கையின் ராஜாவே சத்ய அனாதி தேவே
    பங்கப்பட்டுமடிப் பட்டீரோ பரனே


    Aathampurintha Paavaththaalae Manudanaaki
    Vaetham Purintha Sirai Viduviththeero Paranae

    Aevai Pariththa Kaniyaalae Vilaintha Ellaap
    Paavaththukkaakap Paliyaaneero Paranae

    Vaetha Karpanaiyanaiththum Meerinarar Purintha
    Paathakan Theerappaadupattiro Paranae

    Thanthaip Pithaavuk Kummaith Thakanappaliyaliththu
    Maintharai Meetkamanam Vaiththeero Paranae

    Siluvai Sumaiporaamal Thiyangith Tharaiyil Vilak
    Kolainjar Adarnthu Kotti Konndaaro Paranae

    Valiya Paavaththai Neekki Manudarai Eetaettich
    Siluvai Sumanthirangith Thikaiththeero Paranae

    Senniyil Thaiththamutichchiluvaiyin Paaraththinaal
    Unniyalunthath Thuyar Uttaro Paranae

    Vatiyum Uthiramoda Marukith Thaviththuvaatik
    Kotiya Kurusil Kolaiyunnteero Paranae

    Vaanam Puvipataiththa Vallamaip Pithaavin Mainthar
    Eenakkolainjar Kaiyaalirantheero Paranae

    Sangaiyin Raajaavae Sathya Anaathi Thaevae
    Pangappattumatip Pattiro Paranae

    Aatham Purintha Pavathale - ஆதம்புரிந்த பாவத்தாலே Aatham Purintha Pavathale - ஆதம்புரிந்த பாவத்தாலே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.