Aathi Mei Devane - ஆதி மெய் தேவனே

    Aathi Mei Devane - ஆதி மெய் தேவனே


    ஆதி மெய் தேவனே
    உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ?
    நீதியாம் ஜோதி அநாதி தேவனே
    உம் நீதிக்கோர் எல்லையுண்டோ?

    1. பாவத்தில் மாண்ட என்னை
    கோபத்தால் அழிக்காமல்
    இரட்சித்த உந்தன் அன்பை
    நினைத்து நான் பட்சமாய்
    போற்றிடுவேன்

    2. எத்தனையோ பாவங்கள்
    கர்த்தாவே அகற்றினீர்
    பத்தில் ஓர் பங்கு
    போதாதென்றெண்ணி
    நான் தத்தம் செய்தேன்
    உமக்கே!

    3. பாவமாம் கடலிலே
    அமிழ்ந்து போன என்னை
    தூக்கி எடுத்த உம் அன்பை
    நினைத்தே என் துதிகள் தான்
    போதுமோ?

    4. எண்ணும் நன்மை எதுவும்
    என்னிலே இல்லை ஐயா
    பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
    என்னில் கொண்ட உம் அன்பு
    தானே!


    Aathi Mey Thaevanae
    Um Anpirkor Ellaiyunntoo?
    Neethiyaam Jothi Anaathi Thaevanae
    Um Neethikkor Ellaiyunntoo?

    1. Paavaththil Maannda Ennai
    Kopaththaal Alikkaamal
    Iratchiththa Unthan Anpai
    Ninaiththu Naan Patchamaay
    Pottiduvaen

    2. Eththanaiyo Paavangal
    Karththaavae Akattineer
    Paththil or Pangu
    Pothaathentennnni
    Naan Thaththam Seythaen
    Umakkae!

    3. Paavamaam Kadalilae
    Amilnthu Pona Ennai
    Thookki Eduththa Um Anpai
    Ninaiththae en Thuthikal Thaan
    Pothumo?

    4. Ennnum Nanmai Ethuvum
    Ennilae Illai Aiyaa
    Pinnae Aen Ennai Naesiththeero
    Ennil Konnda Um Anpu
    Thaanae!

    Aathi Mei Devane - ஆதி மெய் தேவனே Aathi Mei Devane - ஆதி மெய்  தேவனே Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.