Muzhankaal Mudangum - முழங்கால்கள் முடங்கும் | Bro.James Britto

    Muzhankaal Mudangum - முழங்கால்கள் முடங்கும் | Bro.James Britto



    முழங்கால்கள் முடங்கும்
    நாவு யாவும் அறிக்கையிடும்
    மலை யாவும் அசையும்
    உம் மகிமையின் பிரசன்னம் முன்-2

    ஆவியானவரே அக்கினியாய்
    என்னை மாற்றும்-2
    உம் மகிமையின் பிரசன்னத்தால்
    என்னை இன்றே மூடிடும்-2

    1.உமக்காக காத்திருந்து
    உம் சாயலை நான் தரித்திட
    உம்மைப்போல் மாறிட
    என் உள்ளம் ஏங்குதே-2

    ஆவியானவரே இயேசுவைப்போல்
    என்னை மாற்றும்-2
    உம் மகிமையின் பிரசன்னத்தால்
    என்னை இன்றே மூடிடும்-2

    2.உம் சித்தம் செய்திட
    உம் அன்பை நான் சொல்லிட
    உமக்காக வாழ்ந்திட
    என் இதயம் துடிக்குதே-2

    ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே-2
    உம் மகிமையின் பிரசன்னத்தால்
    என்னை இன்றே மூடிடும்-2-முழங்கால்கள்


    English


    Muzhankaal Mudangum - முழங்கால்கள் முடங்கும் | Bro.James Britto Muzhankaal Mudangum - முழங்கால்கள் முடங்கும் | Bro.James Britto Reviewed by Christking on July 21, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.