Anaadhaigalin Dheivamay – அனாதைகளின் தெய்வமே - Christking - Lyrics

    Anaadhaigalin Dheivamay – அனாதைகளின் தெய்வமே


    D min – T84 – 4/4
    அனாதைகளின் தெய்வமே
    ஆதரவற்றோரின் தெய்வமே
    சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே
    தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே

    எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர்
    பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே
    பிள்ளைகள் இல்லா மலடியை
    பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர்
    – அவள்
    நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே

    சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர்
    பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே
    திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர்
    – அவள்

    எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே
    ஏழையினை நினைக்கிறீர் அழுதிடும்போது
    அணைக்கிறீர்
    இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே
    உடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர்
    – அதன்
    காயங்கள் ஆற்றும் அன்றாடம் தேற்றும் தகப்பனே


    D min – T84 – 4/4
    Anaadhaigalin Dheivamay
    Aadharavatrorin Dheivamay
    Sagaayar Illadhavarku Sagaayaray
    Thagappan Illaadhavarku Neeray Thagappanay

    1. Eliyavarai Uyarthineer Siriyavanai Ezhuppineer
    Prabukkal Naduvil Amarthineer Thagappanay
    Pillaigal Illaa Maladiyai Pillaithaaichiyaai
    Maatrineer
    Nindhaigal Ellaam Nivirthi Seyyum
    Thagappanay

    2. Sathuvam Illaadha Manidharukku Sathuvathai Alikkireer
    Belathinaalay Nirappineer Thagappanay
    Dhikkatru Nirkum Vidhavaiyin Vinnappangalai Kaetkireer
    Ellaigal Engum Thollaigal Neekkum Thagappanay

    3. Yezhaiyinai Ninaikireer Azhudhidumbodhu Anaikireer
    Idukkan Anaithum Agatrineer Thagappanay
    Udaindhu Sidhariya Manadhinai Ullangaiyilay Yaendhineer
    Kaayangal Aatrum Andraadam Thaetrum Thagappanay

    Anaadhaigalin Dheivamay – அனாதைகளின் தெய்வமே  Anaadhaigalin Dheivamay – அனாதைகளின் தெய்வமே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.