Anbae Pirathanam - அன்பே பிரதானம் - Christking - Lyrics

    Anbae Pirathanam - அன்பே பிரதானம்


    அன்பே பிரதானம், – சகோதர அன்பே பிரதானம்.

    1. பண்புறு ஞானம்,- பரம நம்பிக்கை,
    இன்ப விஸ்வாசம், – இவைகளிலெல்லாம்

    2. பலபல பாஷை – படித்தறிந்தாலும்,
    கலகல வென்னும் – கைம்மணியாமே

    3. என் பொருள் யாவும் – ஈந்தளித்தாலும்,
    அன்பில்லையானால் – அதிற்பயனில்லை

    4. துணிவுட னுடலைச் – சுடக்கொடுத்தாலும்,
    பணிய அன்பில்லால் – பயனதிலில்லை

    5. சாந்தமும் தயவும் – சகல நற்குணமும்
    போந்த சத்தியமும் – பொறுமையுமுள்ள

    6. புகழிறு மாப்பு, – பொழிவு பொறாமை,
    பகைய நியாயப் – பாவமுஞ் செய்யா

    7. சினமடையாது, – தீங்கு முன்னாது,
    தினமழியாது, – தீமை செய்யாது

    8. சகலமுந் தாங்கும், – சகலமும் நம்பும்,
    மிகைபட வென்றும் – மேன்மை பெற்றோங்கும்


    Anpae Pirathaanam, – Sakothara Anpae Pirathaanam.

    1. Pannputru Njaanam,- Parama Nampikkai,
    Inpa Visvaasam, – Ivaikalilellaam

    2. Palapala Paashai - Patiththarinthaalum,
    Kalakala Vennum - Kaimmanniyaamae

    3. En Porul Yaavum – Eenthaliththaalum,
    Anpillaiyaanaal – Athirpayanillai

    4. Thunnivuda Nudalaich - Sudakkoduththaalum,
    Panniya Anpillaal - Payanathilillai

    5. Saanthamum Thayavum - Sakala Narkunamum
    Pontha Saththiyamum - Porumaiyumulla

    6. Pukalitru Maappu, – Polivu Poraamai,
    Pakaiya Niyaayap - Paavamunj Seyyaa

    7. Sinamataiyaathu, – Theengu Munnaathu,
    Thinamaliyaathu, – Theemai Seyyaathu

    8. Sakalamun Thaangum, – Sakalamum Nampum,
    Mikaipada Ventum - Maenmai Pettangum

    Anbae Pirathanam - அன்பே பிரதானம் Anbae Pirathanam - அன்பே பிரதானம் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.