Devasudhan Krishthyesu Emai Meetkave - தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே - Christking - Lyrics

    Devasudhan Krishthyesu Emai Meetkave - தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே


    பல்லவி

    தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே வந்தார்
    ஏழையராய் பாவிகட்கோர் இரட்சகராய் நிற்பார் (2)

    சரணங்கள்

    1. அன்பினுக்கு அன்பாக அவனியில் வந்துதித்தார்
    அன்று பல வான் தூதர் ஆர்ப்பரித்தேப் பாட
    அவனியில் பலவும் அதிசயம் நிகழ
    அருமையாய் வந்துதித்தார் (2)
    – தேவ

    2. பாவத்தால் நொந்தவர்க்கு பரம வைத்தியரானார்
    ஏதுமற்ற ஏழைகட்கு இருநிதியானாரே
    துன்புறுவோர்க்கு துன்பங்கள் துடைத்து
    துணைவராய் அணைத்திடவே (2)
    – தேவ

    3. இவ்வுலகோர் ஈடேற பரகதி விட்டு வந்தார்
    செவ்விய நல் உபதேசம் சீர் பெற அளித்திடவே இனியராய் இரங்கி நலமது புரிய நாடியே வந்தனரே (2) – தேவ

    4. தன்னுயிரைப் பலி கொடுத்து நரர் உயிர் காத்திடவே
    பாவிகளைப் பரிவுடனே பரலோகம் சேர்த்திடவே
    கருணையின் கோனே காசரு மணியே
    கனிவோடு அருள் புரிவீர் (2)
    – தேவ

    5. பொல்லாத சிந்தைகளால் நிறைந்திட்ட உள்ளமதை
    நல்வழிக்காய் திறந்து வைத்தால் இயேசதில் புகுந்திடுவார்
    பாவங்கள் நீங்க பரிசுத்தப்படுத்தி
    பாங்குடன் தாங்கிடுவார் (2)
    – தேவ


    Pallavi

    Thaevasuthan Kiristhaesu Emai Meetkavae Vanthaar
    Aelaiyaraay Paavikatkor Iratchakaraay Nirpaar (2)

    Saranangal

    1. Anpinukku Anpaaka Avaniyil Vanthuthiththaar
    Antu Pala Vaan Thoothar Aarppariththaep Paada
    Avaniyil Palavum Athisayam Nikala
    Arumaiyaay Vanthuthiththaar (2)
    – Thaeva

    2. Paavaththaal Nonthavarkku Parama Vaiththiyaraanaar
    Aethumatta Aelaikatku Irunithiyaanaarae
    Thunpuruvorkku Thunpangal Thutaiththu
    Thunnaivaraay Annaiththidavae (2)
    – Thaeva

    3. Ivvulakor Eetaera Parakathi Vittu Vanthaar
    Sevviya Nal Upathaesam Seer Pera Aliththidavae
    Iniyaraay Irangi Nalamathu Puriya
    Naatiyae Vanthanarae (2)
    – Thaeva

    4. Thannuyiraip Pali Koduththu Narar Uyir Kaaththidavae
    Paavikalaip Parivudanae Paralokam Serththidavae
    Karunnaiyin Konae Kaasaru Manniyae
    Kanivodu Arul Puriveer (2)
    – Thaeva

    5. Pollaatha Sinthaikalaal Nirainthitta Ullamathai
    Nalvalikkaay Thiranthu Vaiththaal Iyaesathil Pukunthiduvaar
    Paavangal Neenga Parisuththappaduththi
    Paangudan Thaangiduvaar (2)
    – Thaeva

    Devasudhan Krishthyesu Emai Meetkave - தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே  Devasudhan Krishthyesu Emai Meetkave - தேவசுதன் கிறிஸ்தேசு எமை மீட்கவே Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.