Devathi Devae Neerae - தேவாதி தேவே நீரே - Christking - Lyrics

    Devathi Devae Neerae - தேவாதி தேவே நீரே


    தேவாதி தேவே நீரே சேவிக்கில் உம்மை
    ஜீவாமிர்தம் தரு வீரே

    ஈவாகிய தயவை நாவாலும் நயம்பெறப்
    பாவாலும் எவர்முனும் ஓவா தறிக்கைசெய்து

    நன்றே அருள் என்றே கொலைக்குச் சென்றாய் மரித்
    தன்றே நீ பேயை முற்றும் வென்றாய்
    நின்றே இவ்வுலகினில் அன்றாடகவே நம்பி
    நேசா விஸ்வாசா இராசா சருவ ஜீவ

    பொல்லா உலகம் அல்லோ இதனில் செல்லா துணை
    நல்லாயனே என்பேன் வல்லாய்
    சல்லாப நூலில் அதி உல்லாச மேவிநிதம்
    தாயா மாதூயா நன்னேயா சுரர்கள் பதி

    பண்டே மறைகை கொண்டே இதயத் தொண்டே புரிந்
    தண்டே வரும் உதவி உண்டே
    விண்டே குறைகளும் தண்டை சுகிர்தமாகும்
    வேதா என் தாதா அதீதா மகத்வமான


    Thaevaathi Thaevae Neerae Sevikkil Ummai
    Jeevaamirtham Tharu Veerae

    Eevaakiya Thayavai Naavaalum Nayamperap
    Paavaalum Evarmunum Ovaa Tharikkaiseythu

    Nante Arul Ente Kolaikkuch Sentay Marith
    Thante Nee Paeyai Muttum Ventay
    Ninte Ivvulakinil Antadakavae Nampi
    Naesaa Visvaasaa Iraasaa Saruva Jeeva

    Pollaa Ulakam Allo Ithanil Sellaa Thunnai
    Nallaayanae Enpaen Vallaay
    Sallaapa Noolil Athi Ullaasa Maevinitham
    Thaayaa Maathooyaa Nannaeyaa Surarkal Pathi

    Panntae Maraikai Konntae Ithayath Thonntae Purin
    Thanntae Varum Uthavi Unntae
    Vinntae Kuraikalum Thanntai Sukirthamaakum
    Vaethaa en Thaathaa Atheethaa Makathvamaana

    Devathi Devae Neerae - தேவாதி தேவே நீரே Devathi Devae Neerae - தேவாதி தேவே நீரே Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.