Enakkoru Aasai Undu - எனக்கொரு ஆசையுண்டு - Christking - Lyrics

    Enakkoru Aasai Undu - எனக்கொரு ஆசையுண்டு


    எனக்கொரு ஆசையுண்டு
    என் இயேசுவை காண வேண்டும்
    எனக்கொரு ஆவல் உண்டு
    நான் அவரோடு பேச வேண்டும்

    வையகமே வானகமே
    எனது ஆசை நிறைவேறுமா

    மலையும் காடும் சோலையும்
    அலைந்தோடும் கடலும் தேடினேன்
    காணேன் அவரை கதறி அழுதேன்
    கர்த்தரே வாரும் வாரும் என்றேன்

    கரம் ஒன்று என்னைத் தொட்டது
    என் கண்ணீரை மெதுவாய் துடைத்தது
    வேதம் தந்தேன் தினமும் அதிலே
    என்னை பார் என மொழிந்தது

    தினமும் வேதத்தில் காண்கிறேன்
    தேவாதி தேவனை துதிக்கின்றேன்
    ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்
    ஜீவ தேவனை வாழ்த்துகிறேன்


    Enakkoru Aasaiyunndu
    En Yesuvai Kaana Vaenndum
    Enakkoru Aaval Unndu
    Naan Avarodu Paesa Vaenndum

    Vaiyakamae Vaanakamae
    Enathu Aasai Niraivaerumaa

    Malaiyum Kaadum Solaiyum
    Alainthodum Kadalum Thaetinaen
    Kaanneen Avarai Kathari Aluthaen
    Karththarae Vaarum Vaarum Enten

    Karam Ontu Ennaith Thottathu
    En Kannnneerai Methuvaay Thutaiththathu
    Vaetham Thanthaen Thinamum Athilae
    Ennai Paar Ena Molinthathu

    Thinamum Vaethaththil Kaannkiraen
    Thaevaathi Thaevanai Thuthikkinten
    Jepaththil Paesi Makilukinten
    Jeeva Thaevanai Vaalththukiraen

    Enakkoru Aasai Undu - எனக்கொரு ஆசையுண்டு Enakkoru Aasai Undu - எனக்கொரு ஆசையுண்டு Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.