Ennai Jeeva Baliyaai – என்னை ஜீவ பலியாய் - Christking - Lyrics

    Ennai Jeeva Baliyaai – என்னை ஜீவ பலியாய்


    என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
    ஏற்று கொள்ளும் இயேசுவே

    அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று
    சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது
    – என்னை

    1. அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
    அடிமைத்தனத்தினின்றும்
    சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட
    எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன்
    – என்னை

    2. ஆத்ம சரீரமதை உமக்கு
    ஆதீனமாக்கி வைத்தேன்
    பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்
    காத்திருக்கிறேன் கருணை செய்தேவா
    – என்னை

    3. நீதியினாயுதமாய் அவயவம்
    நேர்ந்து விட்டேனுமக்கு
    ஜோதி பரிசுத்தராலயமாகவே
    சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை
    – என்னை


    Ennai Jeeva Paliyaay Oppuviththaen
    Aettu Kollum Yesuvae

    Annai Thanthai Unthan Sannathi Munnintu
    Sonna Vaakkuththaththamallaathu Ippothu
    - Ennai

    1. Anthakaaraththinintum Paavap Paey
    Atimaiththanaththinintum
    Sontha Raththakkirayaththaal Ennai Meetta
    Enthaiyae Unthanukkitho Pataikkiraen
    - Ennai

    2. Aathma Sareeramathai Umakku
    Aatheenamaakki Vaiththaen
    Paathramathaayathaip Paaviththuk Kollak
    Kaaththirukkiraen Karunnai Seythaevaa
    - Ennai

    3. Neethiyinaayuthamaay Avayavam
    Naernthu Vittaenumakku
    Jothi Parisuththaraalayamaakavae
    Sonthamaayth Thanthaen Enthan Sareeraththai
    - Ennai

    Ennai Jeeva Baliyaai – என்னை ஜீவ பலியாய் Ennai Jeeva Baliyaai – என்னை ஜீவ பலியாய் Reviewed by Christking on August 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.