Geetam Geetam Jeya Jeya - கீதம் கீதம் ஜெய ஜெய - Christking - Lyrics

    Geetam Geetam Jeya Jeya - கீதம் கீதம் ஜெய ஜெய


    கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
    கை கொட்டிப் பாடிடுவோம்
    இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா
    ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ! ஆ!

    1. பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல்
    புரண்டுருண்டோடுது பார் – அங்கு
    போட்ட முத்திரை காவல் நிற்குமோ
    தேவ புத்திரர் சந்நிதிமுன் – ஆ! ஆ!

    2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
    ஓடி உரைத்திடுவோம் – தாம்
    கூறின மாமறை விட்டனர் கல்லறை
    போங்கள் கலிலேயாவுக்கு – ஆ! ஆ!

    3. அன்னா காய்பா ஆசாரியர் சங்கம்
    அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா
    பூத கணங்கள் இடி ஒலி கண்டு
    பயந்து நடுங்குகின்றார் – ஆ! ஆ!

    4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
    வருகின்றார் ஜெய வீரன் – நாமம்
    மேள வாத்தியம் கைமணி பூரிகை
    எடுத்து முழங்கிடுவோம் – ஆ! ஆ!


    Geetham Geetham Jeya Jeya Geetham
    Kai Kottip Paadiduvom
    Yesu Raajan Uyirththelunthaar – Allaelooyaa
    Jeyam Entu Aarpparippom – Aa! Aa!

    1. Paar Atho Kallarai Mootinap Perungal
    Puranndurunntooduthu Paar – Angu
    Potta Muththirai Kaaval Nirkumo
    Thaeva Puththirar Sannithimun – Aa! Aa!

    2. Vaenndaam Vaenndaam Aluthida Vaenndaam
    Oti Uraiththiduvom – Thaam
    Koorina Maamarai Vittanar Kallarai
    Pongal Kalilaeyaavukku – Aa! Aa!

    3. Annaa Kaaypaa Aasaariyar Sangam
    Athirati Kollukintar – Innaa
    Pootha Kanangal Iti Oli Kanndu
    Payanthu Nadungukintar – Aa! Aa!

    4. Vaasal Nilaikalai Uyarththi Nadappom
    Varukintar Jeya Veeran – Naamam
    Maela Vaaththiyam Kaimanni Poorikai
    Eduththu Mulangiduvom - Aa! Aa!

    Geetam Geetam Jeya Jeya - கீதம் கீதம் ஜெய ஜெய Geetam Geetam Jeya Jeya - கீதம் கீதம் ஜெய ஜெய Reviewed by Christking on August 09, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.