Immanar Kummarul Eyum - இம்மணர்க் கும்மருள் ஈயும் - Christking - Lyrics

    Immanar Kummarul Eyum - இம்மணர்க் கும்மருள் ஈயும்


    இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசா
    ஏசுக் கிறிஸ்தையா ஓ சருவேசா

    செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்
    தேவரீர் இவ்விரு பேரையும் காரும்

    ஆதமோ டேவையை அன்றமைத்தீரே
    அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே

    அன்பன் ஈசாக்கு ரெபெக்காட் கிரங்கி
    ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர்

    உந்தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்
    ஒருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும்

    தாழ்மை பொறுமைகள் சற்குண மேன்மைகள்
    தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன்

    இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்
    இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும்


    Immanark Kummarul Eeyum Para Vaasaa
    Aesuk Kiristhaiyaa O Saruvaesaa

    Semmaiyum Nanmaiyum Selvamum Thaarum
    Thaevareer Ivviru Paeraiyum Kaarum

    Aathamo Taevaiyai Antamaiththeerae
    Avvithamaaka Neer Intum Seyveerae

    Anpan Eesaakku Repekkaat Kirangi
    Aapirakaamudan Saaraalaik Kaaththeer

    Unthayai Pettivar Ongip Perukavum
    Oruvark Koruvar Nallanpil Nilaikkavum

    Thaalmai Porumaikal Sarkuna Maenmaikal
    Thanthuma Thaaviyaik Konndu Kaaththaalumaen

    Yesukiristhuvai Naesiththu Vaalavum
    Inpa Visuvaasa Veettar Entakavum

    Immanar Kummarul Eyum - இம்மணர்க் கும்மருள் ஈயும்  Immanar Kummarul Eyum - இம்மணர்க் கும்மருள் ஈயும் Reviewed by Christking on August 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.