Iratham kayam kuthum - இரத்தம் காயம் குத்தும் - Christking - Lyrics

    Iratham kayam kuthum - இரத்தம் காயம் குத்தும்


    இரத்தம் காயம் குத்தும்
    நிறைந்து நிந்தைக்கே
    முள் கிரீடத்தாலே சுற்றும்
    சூடுண்ட சிரசே
    முன் கன மேன்மை கொண்ட
    நீலச்சை காண்பானேன்
    ஐயோ வதைந்து நொந்த
    உன்முன் பணிகிறேன்

    நீர் பட்ட வாதை யாவும்
    என் பாவப் பாரமே
    இத்தீங்கும் நோவும் சாவும்
    என் குற்றம் கர்த்தரே
    இதோ நான் என்றுஞ் சாக
    நேரஸ்தன் என்கிறேன்
    ஆனாலும் நீர் அன்பாக
    என்னைக் கண்ணோக்குமேன்

    நீர் என்னை உமதாடாய்
    அறியும் மேய்ப்பரே
    முன் ஜீவன் ஊறும் ஆறாய்
    என் தாகம் தீர்த்தீரே
    நீர் என்னைப் போதிப்பிக்க
    அமிர்தம் உண்டேனே
    நீர் தேற்றரவளிக்க
    பேரின்பமாயிற்றே

    உம்மண்டை இங்கே நிற்பேன்
    என்மேல் இரங்குமேன்
    விண்ணப்பத்தில் தரிப்பேன்
    என் கர்த்தரை விடேன்
    இதோ நான் உம்மைப் பற்றி
    கண்ணீர் விட்டண்டினேன்
    மரிக்கும் உம்மைக் கட்டி
    அணைத்துக் கொள்ளுவேன்

    என் ஏழை மனதுக்கு
    நீர் பாடுபட்டதே
    மகா சந்தோஷத்துக்கு
    பலிக்கும் மீட்பரே
    என் ஜீவனே நான் கூடி
    இச்சிலுவையிலே
    உம்மோடென் கண்ணை மூடி
    மரித்தால் நன்மையே

    நான் உம்மைத் தாழ்மையாக
    வணங்கி நித்தமே
    நீர் பட்ட கஸ்திக்காக
    துதிப்பேன் இயேசுவே
    நான் உம்மில் ஊன்றி நிற்க
    சகாயராயிரும்
    நான் உம்மிலே மரிக்க
    கடாட்சித் தருளும்

    என் மூச்சொடுங்கும் அந்த
    கடை இக்கட்டிலும்
    நீர் எனக்காய் இறந்த
    ரூபாகக் காண்பியும்
    அப்போ நான் உம்மைப்பார்த்து
    கண்ணோக்கி நெஞ்சிலே
    அணைத்துக்கொண்டு சாய்ந்து
    தூங்குவேன் இயேசுவே


    Iraththam Kaayam Kuththum
    Nirainthu Ninthaikkae
    Mul Kireedaththaalae Suttum
    Soodunnda Sirase
    Mun Kana Maenmai Konnda
    Neelachcha Kaannpaanaen
    Aiyo Vathainthu Nontha
    Unmun Pannikiraen

    Neer Patta Vaathai Yaavum
    En Paavap Paaramae
    Iththeengum Nnovum Saavum
    En Kuttam Karththarae
    Itho Naan Entunj Saaka
    Naerasthan Enkiraen
    Aanaalum Neer Anpaaka
    Ennaik Kannnnokkumaen

    Neer Ennai Umathaadaay
    Ariyum Maeypparae
    Mun Jeevan Oorum Aaraay
    En Thaakam Theerththeerae
    Neer Ennaip Pothippikka
    Amirtham Unntaenae
    Neer Thaettaravalikka
    Paerinpamaayitte

    Ummanntai Ingae Nirpaen
    Enmael Irangumaen
    Vinnnappaththil Tharippaen
    En Karththarai Vitaen
    Itho Naan Ummaip Patti
    Kannnneer Vittanntinaen
    Marikkum Ummaik Katti
    Annaiththuk Kolluvaen

    En Aelai Manathukku
    Neer Paadupattathae
    Makaa Santhoshaththukku
    Palikkum Meetparae
    En Jeevanae Naan Kooti
    Ichchiluvaiyilae
    Ummoden Kannnnai Mooti
    Mariththaal Nanmaiyae

    Naan Ummaith Thaalmaiyaaka
    Vanangi Niththamae
    Neer Patta Kasthikkaaka
    Thuthippaen Yesuvae
    Naan Ummil Oonti Nirka
    Sakaayaraayirum
    Naan Ummilae Marikka
    Kadaatchith Tharulum

    En Moochchadungum Antha
    Katai Ikkattilum
    Neer Enakkaay Irantha
    Roopaakak Kaannpiyum
    Appo Naan Ummaippaarththu
    Kannnnokki Nenjilae
    Annaiththukkonndu Saaynthu
    Thoonguvaen Yesuvae

    Iratham kayam kuthum - இரத்தம் காயம் குத்தும்  Iratham kayam kuthum - இரத்தம் காயம் குத்தும் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.