Ivarae Perumaan - இவரே பெருமான் - Christking - Lyrics

    Ivarae Perumaan - இவரே பெருமான்


    இவரே பெருமான் , மற்றப்
    பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

    1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
    பவவினை யாதுமே தெரியார் – இப்

    புவனமீது நமக்குரியார் — இவரே

    2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
    கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்

    இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் — இவரே

    3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
    வலமையில் மிக்க விபகாரி – எக்
    குலத்துக்கும் நல்ல உபகாரி — இவரே

    4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
    மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
    இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் — இவரே

    5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
    உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
    ணுலகு வாழ் தேவ குமாரன் — இவரே

    6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
    துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்

    தன்னை யளித்த ஓர் தியாகன் — இவரே


    Ivarae Perumaan , Mattap
    Paer Alavae Poomaan – Ivarae Perumaan

    1. Kavalaik Kidangaduth Thariyaar – Vaetru
    Pavavinai Yaathumae Theriyaar – Ip

    Puvanameethu Namakkuriyaar — Ivarae

    2. Kurudarkaluk Kuthavum Viliyaam – Pavak
    Karuma Irulai Neekkum Oliyaam – Theyvam

    Irukkun Thalanjal Vaasal Valiyaam — Ivarae

    3. Palapinni Theerkkum Parikaari – Sollum
    Valamaiyil Mikka Vipakaari – Ek
    Kulaththukkum Nalla Upakaari — Ivarae

    4. Aranj Seyvathinil Oru Siththan – Kodu
    Maramvidu Pavarkkarul Muththan – Ingae
    Iranthork Kuyireeyum Karththan — Ivarae

    5. Alakai Thanai Jeyiththa Veeran – Pava
    Ulakai Ratchiththa Elirpaeran – Vinn
    Nulaku Vaal Thaeva Kumaaran — Ivarae

    6. Ponnulakath Thanilvaal Yokan – Arul
    Thunna Ulakil Nanmaith Thaekan – Nampaal

    Thannai Yaliththa or Thiyaakan — Ivarae

    Ivarae Perumaan - இவரே பெருமான்  Ivarae Perumaan - இவரே பெருமான் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.