Iyaesu En Thalaivar - இயேசு என் தலைவர் - Christking - Lyrics

    Iyaesu En Thalaivar - இயேசு என் தலைவர்


    இயேசு என் தலைவர் ஜீவனின் அதிபர்
    சந்தோஷம் சந்தோஷமே
    இகத்தினில் அவர்போல் அன்பதாய்க் காப்பார்
    யார் உண்டு சொல் மனமே!

    1. நாள் மட்டும் நடத்தினாரே
    நன்மையால் சூட்டினாரே
    கரம் நீட்டித் தூக்கினாரே
    சுகம் சுகம் அவர் நிழலே
    முகம் முகம் அவரைத் தரிசிக்கும் நாளே
    எனக்கு ஓர் பொன்நாளே

    2. மாறிடும் மனிதப் பண்பு
    விலகிடும் மனித அன்பு
    போற்றுவார் தூற்றிடுவார்
    இயேசுவோ அன்பில் மாறார்
    மாறும் உலகில் மாறாத இயேசு
    அவரையே நிதம் போற்று

    3. இந்திய தேசம் வர
    இளமையில் எழுந்து நின்றார்
    சிறுவனே உட்கார் என்றார்
    கேரியோ வென்று வந்தார்
    மனிதனின் சிந்தை சோர்பு அளிக்கும்
    உற்சாகம் செய்வார் இயேசு

    4. ஆசையாய் ஆதரித்தோர்
    சீற்றத்தால் அகன்றே போனார்
    தேவனோ அவன் அருகில்
    அதோனிராம் ஜட்சன் வென்றார்
    மனிதரைச் சார்ந்தால் மண்வீடாய் போவாய்
    தேவனைப் பற்றி நீ வாழ்

    5. ஓசன்னா சொன்னோர் எங்கே?
    ஓடினேன் என்றோன் எங்கே?
    சிலுவையின் சுமை தணிக்கப்
    பழகியோர் யாரும் இல்லை
    இறுதிவரை நான் உம் சார்பில் நிற்க
    அருள் ஈயும் இயேசு நாதா


    Yesu en Thalaivar Jeevanin Athipar
    Santhosham Santhoshamae
    Ikaththinil Avarpol Anpathaayk Kaappaar
    Yaar Unndu Sol Manamae!

    1. Naal Mattum Nadaththinaarae
    Nanmaiyaal Soottinaarae
    Karam Neettith Thookkinaarae
    Sukam Sukam Avar Nilalae
    Mukam Mukam Avaraith Tharisikkum Naalae
    Enakku or Ponnaalae

    2. Maaridum Manithap Pannpu
    Vilakidum Manitha Anpu
    Pottuvaar Thoottiduvaar
    Yesuvo Anpil Maaraar
    Maarum Ulakil Maaraatha Yesu
    Avaraiyae Nitham Pottu

    3. Inthiya Thaesam Vara
    Ilamaiyil Elunthu Nintar
    Siruvanae Utkaar Entar
    Kaeriyo Ventu Vanthaar
    Manithanin Sinthai Sorpu Alikkum
    Ursaakam Seyvaar Yesu

    4. Aasaiyaay Aathariththor
    Seettaththaal Akante Ponaar
    Thaevano Avan Arukil
    Athoniraam Jatchan Ventar
    Manitharaich Saarnthaal Mannveedaay Povaay
    Thaevanaip Patti Nee Vaal

    5. Osannaa Sonnor Engae?
    Otinaen Enton Engae?
    Siluvaiyin Sumai Thannikkap
    Palakiyor Yaarum Illai
    Iruthivarai Naan Um Saarpil Nirka
    Arul Eeyum Yesu Naathaa

    Iyaesu En Thalaivar - இயேசு என் தலைவர்  Iyaesu En Thalaivar - இயேசு என் தலைவர் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.