Payanathin Kalaipinaale - பயணத்தின் களைப்பினாலே : - Christking - Lyrics

    Payanathin Kalaipinaale - பயணத்தின் களைப்பினாலே :



    பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலே
    குடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ...
    நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன்
    என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா - 2

    நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய்
    உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிது
    கயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமே
    கையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா - 2

    எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்ல
    நான் சொன்ன தண்ணீர் சொர்க்கம் காணும் வரையில் தாகமில்லை
    எனக்கந்த தண்ணீர் ஐயா தாரும் ஐயா பெருந்தாகம்
    தீர்ந்துவிடும் என்றால் ஐயா இடுப்பொடிய வேலை இல்லை - 2

    தருகின்றேன் பெண்ணே நீயும் உன் கணவன் இங்கு வரவே
    அழைத்து வந்து காண வேண்டும் அக்கணமே நான் தருவேன்
    மனம் திறந்து சொல்கின்றேன் எனக்கோ கணவனும் இல்லை
    உம்மிடம் நான் மறைப்பதற்கு ஒன்றுமில்லை ஐயா - 2

    எல்லாம் சரிதான் பெண்ணே ஐந்து கணவர் வாழ்ந்தார்
    இருப்பவனும் கணவன் அல்ல ஏதுமில்லா பெண்தான் நீ
    தலைவா நீர் ஞானி ஐயா நற்றொழுகை புரிந்திடவே
    நீங்கள் சொல்லும் எருசலேமே நிலையான இடமா ஐயா - 2

    தலைவனையே தொழுவதற்கு இடமா வேண்டும் பெண்ணே
    ஓங்கிவரும் ஆவியிலும் உத்தமனை தொழுதிடலாம்
    பாவத்தை தீர்ப்பதற்கு இயேசுபிரான் வருகின்றார்
    நேசமகன் வருகின்றபோது அனைத்தையுமே சொல்லிடுவார் - 2

    நேசமகன் அந்த இயேசு நாயகன் நானே பெண்ணே
    பாவங்கள் தீர்க்கவல்ல பாசமகன் நான் பெண்ணே
    வியக்கின்றேன் வியக்கின்றேன் ஐயா விந்தைமிகு இயேசுதேவ
    ஊருக்குள்ளே விரைகின்றேன் நான் உன்மையை சொல்லிடவே - 2


    English


    Payanathin Kalaipinaale - பயணத்தின் களைப்பினாலே : Payanathin Kalaipinaale - பயணத்தின் களைப்பினாலே : Reviewed by Christking on August 08, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.