Jebame en Vaazhvin - ஜெபமே என் வாழ்வில் - Christking - Lyrics

    Jebame en Vaazhvin - ஜெபமே என் வாழ்வில்


    ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற
    ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே
    ஜெபமின்றியே ஜெயமில்லையே
    ஜெப சிந்தை எனில் தாருமே

    இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்
    இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்
    பொறுமையுடன் காத்திருந்தே
    போராடி ஜெபித்திடவே

    சோதனையணுகா விழிப்புடன் ஜெபிக்க
    சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க
    என் மாம்சத்தின் பெலவீனத்தில்
    ஆவியின் பெலன் தாருமே

    எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்
    பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்
    துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்
    உபவாசம் எனில் தாருமே

    முழங்காலில் நின்றே முழு மனதுடனே
    விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க
    உம் வருகை நாளதிலே
    உம்முடன் சேர்ந்திடவே


    Jepamae en Vaalvil Seyalaaka Maara
    Jepa Aaviyaal Ennai Niraiththidumae
    Jepamintiyae Jeyamillaiyae
    Jepa Sinthai Enil Thaarumae

    Iravellaam Jepiththa en Thaevanae Um
    Ithayaththin Paaram Ennilum Thaarum
    Porumaiyudan Kaaththirunthae
    Poraati Jepiththidavae

    Sothanaiyanukaa Vilippudan Jepikka
    Sothanaiyathilum Sornthidaa Jepikka
    En Maamsaththin Pelaveenaththil
    Aaviyin Pelan Thaarumae

    Entha Samayamum Ellaa Manitharkkum
    Parisuththavaankal Pannikal Palanukkum
    Thuthi Sthoththiram Jepam Vaennduthal
    Upavaasam Enil Thaarumae

    Mulangaalil Ninte Mulu Manathudanae
    Visuvaasam Uruthiyil Unnmaiyaay Jepikka
    Um Varukai Naalathilae
    Ummudan Sernthidavae

    Jebame en Vaazhvin - ஜெபமே என் வாழ்வில் Jebame en Vaazhvin - ஜெபமே என் வாழ்வில் Reviewed by Christking on September 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.