Kaappaar Unnaik Kaappaar - காப்பார் உன்னைக் காப்பார் - Christking - Lyrics

    Kaappaar Unnaik Kaappaar - காப்பார் உன்னைக் காப்பார்


    காப்பார் உன்னைக் காப்பார்
    காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
    கலங்காதே மனமே — காத்திடுவார்

    1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
    ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
    என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
    ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் — காப்பார்

    2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
    இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
    இல்லையோ , இல்லையோ , இல்லையோ
    மனஸ்தாபம் கொள்ளவில்லையோ — காப்பார்

    3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
    சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
    ஜெயமும் , கனமும் , சுகமும்
    இரக்கமா யுனக்களிப்பவரும் — காப்பார்

    4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
    காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
    அன்பு கொண்டு மணந்தவரே — காப்பார்

    5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
    காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
    பரிசுத்தத்தில் லங்கரித்தார் — காப்பார்


    Kaappaar Unnaik Kaappaar
    Kaaththavar Kaappaar , Innum Inimael Kaaththiduvaar
    Kalangaathae Manamae — Kaaththiduvaar

    1. Kanndunai Alaiththavar Karamathaippaar , Avar Kaividaathiruppaar
    Aanndukal Thorum Unakkavar Aliththa Aasikalai Ennnnippaar
    Ennnippaar , Ennnippaar , Ennnnippaar
    Ontantayathai Ennnnippaar — Kaappaar

    2. Isravaelukku Vaakkuppati Inpak Kaanaan Alikkavillaiyo
    Ippothivarkalai Nirmoolam Seyvathentu Pinnum Irangavillaiyo
    Illaiyo , Illaiyo , Illaiyo
    Manasthaapam Kollavillaiyo — Kaappaar

    3. Veelchchiyil Viliththunnai Meetpavarum Ikalnthuvidaathu Serppavarum
    Sirsila Vaelaiyil Sitchayinaalunnaik Kittiyiluppavarum
    Jeyamum , Kanamum , Sukamum
    Irakkamaa Yunakkalippavarum — Kaappaar

    4. Thaayin Kattil Varumun Unakkaayth Thaamuyir Koduththavarae
    Kaayeenaip Polunaith Thallividaathu Kai Koduththeduththavarae
    Anpu Konndu Mananthavarae — Kaappaar

    5. Aatharavaayp Pala Aanndukalil Paran Ataikkalamaayirunthaar
    Kaathaludannavar Kaippanni Seythidak Kanivudanaathariththaar
    Parisuththaththil Langariththaar — Kaappaar

    Kaappaar Unnaik Kaappaar - காப்பார் உன்னைக் காப்பார் Kaappaar Unnaik Kaappaar - காப்பார் உன்னைக் காப்பார் Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.