Kadavulai Manithan - கடவுளை மனிதன் - Christking - Lyrics

    Kadavulai Manithan - கடவுளை மனிதன்


    கடவுளை மனிதன் விலகுதல் பாவம்
    நித்தியம் அவரைப் பிரிந்தால் நரகம்
    அங்கே அகோரம் அழிவின்
    பாதாளம் அங்கு செல்வோர்
    வாழ்வும் பரிதாபம்!

    1. படைப்புக்கு நிகராய் கடவுளை
    மதித்து கற்பனை வடிவம்
    தருவது பாவம் மெய்
    தேவனைத் தள்ளி
    சொரூபங்கள் முன்னே
    வீழ்ந்து வணங்குதல்
    மாபெரும் துரோகம்!

    2. மனம்போன பாதையில்
    தொலைவது பாவம்
    நெறிகெட்டுத் திரிவது
    கீழ்த்தரமாகும் தேவனின்
    கட்டளை மீறுதல் பாவம்
    அக்கிரம சிந்தையும்
    அசுத்தமும் பாவம்!

    3. அன்பில்லா செயல்கள்
    அனைத்துமே பாவம்
    அடிமைப்படுத்தும் எல்லாம்
    பாவம் நன்மை செய்யத்
    தவறுதல் பாவம் சாவை
    விரும்பும் சபலமும் பாவம்!

    4. இயேசுவின் தெய்வீகம்
    மறுப்பது பாவம் – அவர்
    பாவப்பரிகாரம் அலட்சியம்
    பாவம் கடவுளின் ஆட்சியை
    எதிர்ப்பது பாவம் இடறலாய்
    வாழும் துணிகரம் பாவம்!


    Kadavulai Manithan Vilakuthal Paavam
    Niththiyam Avaraip Pirinthaal Narakam
    Angae Akoram Alivin
    Paathaalam Angu Selvor
    Vaalvum Parithaapam!

    1. Pataippukku Nikaraay Kadavulai
    Mathiththu Karpanai Vativam
    Tharuvathu Paavam Mey
    Thaevanaith Thalli
    Soroopangal Munnae
    Veelnthu Vananguthal
    Maaperum Thurokam!

    2. Manampona Paathaiyil
    Tholaivathu Paavam
    Nerikettuth Thirivathu
    Geelththaramaakum Thaevanin
    Kattalai Meeruthal Paavam
    Akkirama Sinthaiyum
    Asuththamum Paavam!

    3. Anpillaa Seyalkal
    Anaiththumae Paavam
    Atimaippaduththum Ellaam
    Paavam Nanmai Seyyath
    Thavaruthal Paavam Saavai
    Virumpum Sapalamum Paavam!

    4. Yesuvin Theyveekam
    Maruppathu Paavam – Avar
    Paavapparikaaram Alatchiyam
    Paavam Kadavulin Aatchiyai
    Ethirppathu Paavam Idaralaay
    Vaalum Thunnikaram Paavam!

    Kadavulai Manithan - கடவுளை மனிதன்  Kadavulai Manithan - கடவுளை மனிதன் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.