Kadanthu Vantha Paathaihalai - கடந்து வந்த பாதைகளைத் - Christking - Lyrics

    Kadanthu Vantha Paathaihalai - கடந்து வந்த பாதைகளைத்


    கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்
    கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
    நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

    அப்பா உமக்கு நன்றி ,ராஜா உமக்கு நன்றி

    அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
    அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

    எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
    எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

    பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
    பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே

    ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
    உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

    தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
    எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

    எத்தனையோ புதுபாடல் நாவில் வைத்தீர்
    இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்


    Kadanthu Vantha Paathaikalaith Thirumpip Paarkkiraen
    Kannnneerodu Karththaavae Nanti Solkiraen
    Nanti Solkiraen Naan Nanti Solkiraen

    Appaa Umakku Nanti ,raajaa Umakku Nanti

    Anaathaiyaay Alainthae Naan Thirinthaen Aiyaa
    Alaathae Entu Solli Annaiththeer Aiyaa

    Ethiraay Vantha Soolchchikalai Muriyatiththeerae
    Entha Nilaiyilum Ummaith Thuthikka Vaiththeerae

    Paadukalai Sumanthu Sella Pelan Thantheerae
    Parisuththamaay Vaalvu Vaala Thunnai Seytheerae

    Oru Naalum Kuraivillaamal Unavu Thantheer
    Uraividamum Utaiyum Thanthu Kaaththu Vantheer

    Thallappatta Kallaakak Kidanthaen Aiyaa
    Eduththu Ennai Payanpaduththi Makilkinteer Aiyaa

    Eththanaiyo Puthupaadal Naavil Vaiththeer
    Ilatchangalai Iratchikka Payanpaduththukireer

    Kadanthu Vantha Paathaihalai - கடந்து வந்த பாதைகளைத் Kadanthu Vantha Paathaihalai -  கடந்து வந்த பாதைகளைத் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.