Kanden En Kan Kulira - கண்டேன் என் கண்குளிர - Christking - Lyrics

    Kanden En Kan Kulira - கண்டேன் என் கண்குளிர


    கண்டேன் என் கண்குளிர – கர்த்தனையின்று
    கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்
    – கண்

    1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
    உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்
    – கண்

    2.தேவாதி தேவனை, தேவசேனை
    ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்
    – கண்

    3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
    ஆவேந்தர் – அடிதொழும் அன்பனை என் இன்பனை நான்
    – கண்

    4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
    இத்தரை – மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக்
    – கண்

    5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
    விண்ணோரும் – வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக்
    – கண்

    6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
    கண்டோர்கள் – கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக்
    – கண்

    7.அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
    முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்
    – கண்


    Kanntaen en Kannkulira - Karththanaiyintu
    Konndaadum Vinnnnorkal Komaanaik Kaiyilaenthik
    - Kann

    1.peththalaem Saththira Munnannaiyil
    Uttaruk Kuyirtharum Unnmaiyaam en Ratchakanaik
    - Kann

    2.thaevaathi Thaevanai, Thaevasenai
    Oyaathu - Thoththarikkum Oppunikar Attavanaik
    - Kann

    3.paarvaenthar Thaetivarum Pakthar Paranai,
    Aavaenthar - Atitholum Anpanai en Inpanai Naan
    - Kann

    4.muththolir Karththaavaam Munnavanai,
    Iththarai - Meetka Enai Nadaththi Vantha Mannavanaik
    - Kann

    5.mannnnor Irul Pokkum Maamanniyai
    Vinnnnorum - Vaenntinirkum Vinnmanniyaik Kannmanniyaik
    - Kann

    6.anntinork Kanpuruvaam Aarananai
    Kanntoorkal - Kali Theerkkum Kaarananai, Poorananaik
    - Kann

    7.annaiyaam - Kanniyum Aiyanudan
    Munnari - Yaappasuvin Pullannaiyil Unnalakaik
    - Kann

    Kanden En Kan Kulira - கண்டேன் என் கண்குளிர Kanden En Kan Kulira - கண்டேன் என் கண்குளிர Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.