Kanikkaiyaga Vanthaen Kanivodu - காணிக்கையாக வந்தேன் கனிவோடு - Christking - Lyrics

    Kanikkaiyaga Vanthaen Kanivodu - காணிக்கையாக வந்தேன் கனிவோடு


    காணிக்கையாக வந்தேன் கனிவோடு ஏற்றிடுவாய்

    படைத்தவா பணிகின்றேன் பரமனே புகழ்கின்றேன்

    குயவன் நீயே களிமண் நானல்லவா

    குன்றாத உனது மகிமை நான் சொல்லவா

    இறைவனே ஆகட்டும் உன் உளமே

    அழகான உலகம் அதில் ஒரு மனிதம் அன்பாக நீ படைத்தாய்

    அனைவரும் மகிழ்ந்து ஆனந்தம் பகிர்ந்து அமைத்திட நீ பணித்தாய் – 2

    எல்லாமே உனதன்றோ என்றே யாம் உணர்ந்தோம்

    வல்லவா உம் கையில் யாம் கொணர்ந்தோம்

    உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக

    சூடாத மலரும் சுவைக்காத உணவும் கையிலே பயன் என்ன

    காய்க்காத மரமும் கனியில்லா கொடியும் காய்ந்தும் இழப்பென்ன – 2

    எம் வாழ்வின் பொருளாக உம் மீட்பின் அருளாக

    உம் கையில் எம்மை யாம் கொடுத்தோம்

    உம் சித்தமே நிறைவேறுக உம் திட்டமே எங்கும் நிறைவாகுக


    Kaannikkaiyaaka Vanthaen Kanivodu Aettiduvaay

    Pataiththavaa Pannikinten Paramanae Pukalkinten

    Kuyavan Neeyae Kalimann Naanallavaa

    Kuntatha Unathu Makimai Naan Sollavaa

    Iraivanae Aakattum Un Ulamae

    Alakaana Ulakam Athil Oru Manitham Anpaaka Nee Pataiththaay

    Anaivarum Makilnthu Aanantham Pakirnthu Amaiththida Nee Panniththaay – 2

    Ellaamae Unathanto Ente Yaam Unarnthom

    Vallavaa Um Kaiyil Yaam Konarnthom

    Um Siththamae Niraivaeruka Um Thittamae Engum Niraivaakuka

    Soodaatha Malarum Suvaikkaatha Unavum Kaiyilae Payan Enna

    Kaaykkaatha Maramum Kaniyillaa Kotiyum Kaaynthum Ilappenna – 2

    Em Vaalvin Porulaaka Um Meetpin Arulaaka

    Um Kaiyil Emmai Yaam Koduththom

    Um Siththamae Niraivaeruka Um Thittamae Engum Niraivaakuka

    Kanikkaiyaga Vanthaen Kanivodu - காணிக்கையாக வந்தேன் கனிவோடு Kanikkaiyaga Vanthaen Kanivodu - காணிக்கையாக வந்தேன் கனிவோடு Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.