Kanntaenen Kannkulira - கண்டேனென் கண்குளிர - Christking - Lyrics

    Kanntaenen Kannkulira - கண்டேனென் கண்குளிர


    கண்டேனென் கண்குளிர – கர்த்தனை யின்று
    கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்
    — கண்

    1. பெத்தலேம் – சத்திர முன்னணையில்
    உற்றோருக் – குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்
    — கண்

    2. தேவாதி – தேவனை, தேவசேனை
    ஓயாது – தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்
    — கண்

    3. பாவேந்தர் – தேடிவரும் பக்தர் பரனை,
    ஆரேந்தர் – அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான்
    — கண்

    4. முத்தொழிற் – கர்த்தாவாம் முன்னவனை,
    இத்தரை – மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக்
    — கண்

    5. மண்ணோர் – இருள்போக்கும் மாமணியை,
    விண்ணோரும் – வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக்
    — கண்

    6. அண்டி னோர்க் – கன்புருவாம் ஆரணனை,
    கண்டோர்கள் – கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் — கண்

    7. அன்னையாம் – கன்னியும் ஐயனுடன்
    முன்னறி – யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்
    — கண்


    Kanntaenen Kannkulira – Karththanai Yintu
    Konndaadum Vinnnnorkal Komaanaik Kaiyilaenthik
    — Kann

    1. Peththalaem – Saththira Munnannaiyil
    Uttaruk – Kuyirtharum Unnmaiyaam en Ratchakanaik
    — Kann

    2. Thaevaathi – Thaevanai, Thaevasenai
    Oyaathu – Thoththarikkum Oppunikar Attavanaik
    — Kann

    3. Paavaenthar – Thaetivarum Pakthar Paranai,
    Aaraenthar – Atitholum Anpanai, en Inpanainaan
    — Kann

    4. Muththolir – Karththaavaam Munnavanai,
    Iththarai – Meetka Enai Naththi Vantha Mannavanaik
    — Kann

    5. Mannnnor – Irulpokkum Maamanniyai,
    Vinnnnorum – Vaennti Nirkum Vinnmanniyaik, Kannmanniyaik
    — Kann

    6. Annti Nork – Kanpuruvaam Aarananai,
    Kanntoorkal – Kalitheerkkum Kaarananai, Poorananaik
    — Kann

    7. Annaiyaam – Kanniyum Aiyanudan
    Munnari – Yaappasuvin Pullannaiyil Unnalakaik
    — Kann

    Kanntaenen Kannkulira - கண்டேனென் கண்குளிர  Kanntaenen Kannkulira - கண்டேனென் கண்குளிர Reviewed by Christking on September 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.