Karthave Yuga Yugamai - கர்த்தாவே யுகயுகமாய் - Christking - Lyrics

    Karthave Yuga Yugamai - கர்த்தாவே யுகயுகமாய்


    1. கர்த்தாவே யுகயுகமாய்
    எம் துணை ஆயினீர்
    நீர் இன்னும் வரும் காலமாய்
    எம் நம்பிக்கை ஆவீர்

    2. உம் ஆசனத்தின் நிழலே
    பக்தர் அடைக்கலம்
    உம் வன்மையுள்ள புயமே
    நிச்சய கேடகம்

    3. பூலோகம் உருவாகியே
    மலைகள் தோன்றுமுன்
    சுயம்புவாய் என்றும் நீரே
    மாறா பராபரன்

    4. ஆயிரம் ஆண்டு உமக்கு
    ஓர் நாளைப் போலாமே
    யுகங்கள் தேவரீருக்கு
    ஓர் இமைக்கொப்பாமே

    5. சாவுக்குள்ளான மானிடர்
    நிலைக்கவே மாட்டார்
    உலர்ந்த பூவைப்போல் அவர்
    உதிர்ந்து போகிறார்

    6. கர்த்தாவே யுகயுகமாய்
    எம் துணை ஆயினீர்
    இக்கட்டில் நற் சகாயராய்
    எம் நித்திய வீடாவீர்


    1. Karththaavae Yukayukamaay
    Em Thunnai Aayineer
    Neer Innum Varum Kaalamaay
    Em Nampikkai Aaveer

    2. Um Aasanaththin Nilalae
    Pakthar Ataikkalam
    Um Vanmaiyulla Puyamae
    Nichchaya Kaedakam

    3. Poolokam Uruvaakiyae
    Malaikal Thontumun
    Suyampuvaay Entum Neerae
    Maaraa Paraaparan

    4. Aayiram Aanndu Umakku
    Or Naalaip Polaamae
    Yukangal Thaevareerukku
    Or Imaikkoppaamae

    5. Saavukkullaana Maanidar
    Nilaikkavae Maattar
    Ularntha Poovaippol Avar
    Uthirnthu Pokiraar

    6. Karththaavae Yukayukamaay
    Em Thunnai Aayineer
    Ikkattil Nar Sakaayaraay
    Em Niththiya Veedaaveer

    Karthave Yuga Yugamai - கர்த்தாவே யுகயுகமாய் Karthave Yuga Yugamai - கர்த்தாவே யுகயுகமாய் Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.