Karunagara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி - Christking - Lyrics

    Karunagara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி


    கருணாகர தேவா இரங்கி இந்தக்
    கங்குலில் எனைக் காவா

    இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
    என்றும் ப்ரகாசமாக இலங்கும் மாதிரியேக

    சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச்
    சேர்த்தையே வழி பார்த்துத் திகில் தீர்த்து
    நன்றி யதற்குத் துதி நவில்வன் நீ என் கதி
    நாடும் என் அதிபதி நமஸ்காரம் உனக்கதி

    நித்திரையில் உட்புகுந்து சத்துருப் பசாசு வந்து
    நெருங்காமல் நீ எழுந்து நிலை புரிந்து
    சுத்த நெஞ்சோடமைந்து தூங்க நல் துயில் தந்து
    தூதர் காவல் நிறைந்து துணையாய் என்னோடிருந்து

    தாதா அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே என்னைத்
    தாங்குவதார் பின்னை சார்வன் நின்னை
    வேதா நான் உன் தொண்டு வினைஞன் என்நிலை கண்டு
    மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தனைத்துக் கொண்டு

    தீய எண்ணங்கள் பாற திகில் கனவுகள் மாறத்
    திவ்ய சிந்தை உள் ஊற ஸ்திரம் ஏறக்
    காயம் உயிரும் கூடக் கருத்துன்னோ டுறவாடக்
    காலை நல்லறம் நாடக் கரிசித்துன் துதி பாட


    Karunnaakara Thaevaa Irangi Inthak
    Kangulil Enaik Kaavaa

    Irulaethum Anukaamal Iravilum Pakalpola
    Entum Prakaasamaaka Ilangum Maathiriyaeka

    Senta Pakalil Kaaththuch Ser Vipaththukal Neeththuch
    Serththaiyae Vali Paarththuth Thikil Theerththu
    Nanti Yatharkuth Thuthi Navilvan Nee en Kathi
    Naadum en Athipathi Namaskaaram Unakkathi

    Niththiraiyil Utpukunthu Saththurup Pasaasu Vanthu
    Nerungaamal Nee Elunthu Nilai Purinthu
    Suththa Nenjadamainthu Thoonga Nal Thuyil Thanthu
    Thoothar Kaaval Nirainthu Thunnaiyaay Ennotirunthu

    Thaathaa Anntinaen Unnaith Thanjam Neeyae Ennaith
    Thaanguvathaar Pinnai Saarvan Ninnai
    Vaethaa Naan Un Thonndu Vinainjan Ennilai Kanndu
    Meenndum Settakal Vinndu Vilakaa Thanaiththuk Konndu

    Theeya Ennnangal Paara Thikil Kanavukal Maarath
    Thivya Sinthai Ul Oora Sthiram Aerak
    Kaayam Uyirum Koodak Karuththunno Duravaadak
    Kaalai Nallaram Naadak Karisiththun Thuthi Paada

    Karunagara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி Karunagara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.