Karunai Un Vadivallava - கருணை உன் வடிவல்லவா - Christking - Lyrics

    Karunai Un Vadivallava - கருணை உன் வடிவல்லவா


    கருணை உன் வடிவல்லவா கடவுள் உன் பெயரல்லவா

    கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா

    கருணை உன் வடிவல்லவா

    வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்

    கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்

    எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா

    வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்

    மனதீபம் நீ என்று அறியாமலே

    அருள்மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்

    அகம் ஊறும் உனதன்பைப் புரியாமலே – 2

    தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றன்

    உணராத நிலை மாற்றுவாயோ

    உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்

    ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்

    மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்

    செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்

    புவிமீது இசைஞானம் இழிவாகுமே

    சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்

    புகழ்ந்தாலும் உன் மேன்மை பழுதாகுமே – 2

    உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை

    உண்டாக்கி அருள் வீசுவாயோ

    தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்

    இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்

    நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்


    Karunnai Un Vativallavaa Kadavul Un Peyarallavaa

    Kadanthaalum Ullaththin Ul Vaalpavaa

    Karunnai Un Vativallavaa

    Vaanam Paranthaalum Angum Un Maenmai Thangum

    Kadalaalam Sentalum Un Njaanam Pongum

    Engangum Theyveeka Mayamallavaa

    Veli Engum Sudar Veesum Oli Entu Solvaar

    Manatheepam Nee Entu Ariyaamalae

    Arulmaekam Polikinta Malai Entum Solvaar

    Akam Oorum Unathanpaip Puriyaamalae – 2

    Thodunthooram Irunthaalum Neethaan Entan

    Unaraatha Nilai Maattuvaayo

    Unthan Kadal Ponta Anpin Thuli Pothum Vaalvaen

    Oli Unndu Vaalum Malar Pola Aavaen

    Manavaasal Thiranthae Un Mayamaakuvaen

    Seviyintik Kuyilpaadal Inithentu Sonnaal

    Puvimeethu Isainjaanam Ilivaakumae

    Suyam Thaeti Alaivorkal Anpentu Unnaip

    Pukalnthaalum Un Maenmai Paluthaakumae – 2

    Un Vaana Vinnmeenil Ontay Ennai

    Unndaakki Arul Veesuvaayo

    Thooymai Ulaimeethu Olirum Irumpaakak Kaayvaen

    Iraimeettum Yaalil Narampaakath Thaeyvaen

    Nilai Enna Vanthaalum Unaip Pottuvaen

    Karunai Un Vadivallava - கருணை உன் வடிவல்லவா Karunai Un Vadivallava - கருணை உன் வடிவல்லவா Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.