Kuyavane Kuyavane Padaippin - குயவனே குயவனே படைப்பின் - Christking - Lyrics

    Kuyavane Kuyavane Padaippin - குயவனே குயவனே படைப்பின்


    குயவனே குயவனே படைப்பின் காரணனே
    களிமண்ணான என்னையுமே
    கண்ணோக்கிப் பார்த்திடுமே

    1. வெறுமையான பாத்திரம் நான்
    வெறுத்து தள்ளாமலே
    நிரம்பி வழியும் பாத்திரமாய்
    விளங்க செய்திடுமே
    வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
    இயேசுவைப் போற்றிடுமே
    என்னையும் அவ்வித பாத்திரமாய்
    வனைந்து கொள்ளுமே
    – குயவனே

    2. விலை போகாத பாத்திரம் நான்
    விரும்புவாரில்லையே
    விலையெல்லாம் உம கிருபையால்
    உகந்த தாக்கிடுமே
    தடைகள் யாவும் நீக்கி என்னை
    தம்மைப் போல் மாற்றிடுமே
    உடைத்து என்னை உந்தனுக்கே
    உடைமை ஆக்கிடுமே
    – குயவனே

    3. மண்ணாசையில் நான் மயங்கியே
    மெய்வழி விட்டகன்றேன்
    கண்போன போக்கை பின் பற்றினேன்
    கண்டேனில்லை இன்பமே
    காணாமல் போன பாத்ரம் என்னை
    தேடி வந்த தெய்வமே
    வாழ்நாள் எல்லாம் உம பாதம் சேரும்
    பாதையில் நடத்திடுமே
    – குயவனே


    Kuyavanae Kuyavanae Pataippin Kaarananae
    Kalimannnnaana Ennaiyumae
    Kannnnokkip Paarththidumae

    1. Verumaiyaana Paaththiram Naan
    Veruththu Thallaamalae
    Nirampi Valiyum Paaththiramaay
    Vilanga Seythidumae
    Vaethaththil Kaanum Paaththiramellaam
    Yesuvaip Pottidumae
    Ennaiyum Avvitha Paaththiramaay
    Vanainthu Kollumae
    - Kuyavanae

    2. Vilai Pokaatha Paaththiram Naan
    Virumpuvaarillaiyae
    Vilaiyellaam Uma Kirupaiyaal
    Ukantha Thaakkidumae
    Thataikal Yaavum Neekki Ennai
    Thammaip Pol Maattidumae
    Utaiththu Ennai Unthanukkae
    Utaimai Aakkidumae
    - Kuyavanae

    3. Mannnnaasaiyil Naan Mayangiyae
    Meyvali Vittakanten
    Kannpona Pokkai Pin Pattinaen
    Kanntaenillai Inpamae
    Kaannaamal Pona Paathram Ennai
    Thaeti Vantha Theyvamae
    Vaalnaal Ellaam Uma Paatham Serum
    Paathaiyil Nadaththidumae
    - Kuyavanae

    Kuyavane Kuyavane Padaippin - குயவனே குயவனே படைப்பின் Kuyavane Kuyavane Padaippin - குயவனே குயவனே படைப்பின் Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.