Maname Nee Varutham - மனமே நீ வருத்தம் - Christking - Lyrics

    Maname Nee Varutham - மனமே நீ வருத்தம்


    மனமே நீ வருத்தம் கொள்ளாதே
    வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
    நம் இயேசுவின் அன்பு உண்டு அது
    உனக்கு என்றும் உண்டு

    நினைத்த காரியம் வாய்த்திடாமல்
    வாடிப்போனாயோ
    பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே
    பயந்து போனாயோ
    நம் இயேசுவின் கரங்களே அதனை
    இனி செய்து முடித்திடுமே -2

    நோய்களினாலே பெலனிழந்து மனம்
    நொடிந்து போனாயோ
    மரணந்தான் இனி முடிவென்று சொல்லி
    மௌனம் ஆனாயோ
    நம் இயேசுவின் தழும்புகளால்
    சுகமடையே நோய்களில்லை 2

    சோதனை மேலே சோதனை வந்து
    சோர்ந்து போனாயோ
    விடுதலை பெறவே வழி தெரியாமல்
    துவண்டு போனாயோ
    நம் இரட்சகர் இயேசுவினாலே
    விடுதலை உனக்கென்றுமுண்டு -2


    Manamae Nee Varuththam Kollaathae
    Veennaaka Nee Kalakkam Kollaathae
    Nam Yesuvin Anpu Unndu Athu
    Unakku Entum Unndu

    Ninaiththa Kaariyam Vaayththidaamal
    Vaatipponaayo
    Paarangal Malaipol Kuvinthathaalae
    Payanthu Ponaayo
    Nam Yesuvin Karangalae Athanai
    Ini Seythu Mutiththidumae -2

    Nnoykalinaalae Pelanilanthu Manam
    Notinthu Ponaayo
    Marananthaan Ini Mutiventu Solli
    Maunam Aanaayo
    Nam Yesuvin Thalumpukalaal
    Sukamataiyae Nnoykalillai 2

    Sothanai Maelae Sothanai Vanthu
    Sornthu Ponaayo
    Viduthalai Peravae Vali Theriyaamal
    Thuvanndu Ponaayo
    Nam Iratchakar Yesuvinaalae
    Viduthalai Unakkentumunndu -2

    Maname Nee Varutham - மனமே நீ வருத்தம் Maname Nee Varutham - மனமே நீ வருத்தம் Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.