Aathumaavae Kartharaiyae - ஆத்துமாவே கர்த்தரையே | Jebathotta Jeyageethangal Vol–40 - Christking - Lyrics

    Aathumaavae Kartharaiyae - ஆத்துமாவே கர்த்தரையே | Jebathotta Jeyageethangal Vol–40


    ஆத்துமாவே கர்த்தரையே
    நோக்கி அமர்ந்திரு-2
    நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
    வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே

    1.விட்டுவிடாதே நம்பிக்கையை
    வெகுமதி உண்டு...
    விசுவாசத்தால் உலகத்தையே
    வெல்வது நீதான்-2
    உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர்-2

    நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
    வருமே வந்திடுமே-2-ஆத்துமாவே

    2.உன்னதமான கர்த்தர் கரத்தின்
    மறைவில் வாழ்கின்றோம்...
    சர்வ வல்லவர் நிழலில் தினம்
    வாசம் செய்கின்றோம்-2
    வாதை அணுகாது
    தீங்கு நேரிடாது-2-நான் நம்புவது

    3.பாழாக்கும் கொள்ளை நோய்
    மேற்கொள்ளாமல்...
    பாதுகாத்து பயம் நீக்கி
    ஜெயம் தருகின்றார்-2
    சிறகின் நிழலிலே
    மூடி மறைக்கின்றார்-2-நான் நம்புவது

    4.கர்த்தர் நமது அடைக்கலமும்
    புகலிடமானார்...
    நம்பியிருக்கும் நம் தகப்பன்
    என்று சொல்லுவோம்-2
    சோதனை ஜெயிப்போம்
    சாதனை படைப்போம்-2-நான் நம்புவது

    5.நமது தேவன் என்றென்றைக்கும்
    சதாகாலமும்....
    இறுதிவரை வழி நடத்தும்
    தந்தை அல்லவா-2
    இரக்கம் உள்ளவர்
    நம் இதயம் ஆள்பவர்-2-நான் நம்புவது


    English


    Aathumaavae Kartharaiyae - ஆத்துமாவே கர்த்தரையே | Jebathotta Jeyageethangal Vol–40 Aathumaavae Kartharaiyae - ஆத்துமாவே கர்த்தரையே | Jebathotta Jeyageethangal Vol–40 Reviewed by Christking on December 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.