Paathagan En Vinaitheer Song Lyrics - Christking - Lyrics

    Paathagan En Vinaitheer Song Lyrics


    பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
    பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

    அனுபல்லவி

    தீதகற்றவே சிறந்த
    சேண் உலகினிமை விட்டு,
    பூதலத் துகந்து வந்த
    புண்ணியனே, யேசு தேவா.
    — பாதகன்

    சரணங்கள்

    1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
    மாசில்லாத யேசு நாதனே,
    உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
    முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ?
    — பாதகன்

    2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
    சின்னபின்னம் செய்ய வல்லதே;
    பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
    விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே
    — பாதகன்

    3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
    ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
    தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
    செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து.
    — பாதகன்


    Paathakan en Vinaitheer, Aiyaa; Kirupaakaraa, Nin
    Paadu Ninain Thenaich Ser, Aiyaa.

    Anupallavi

    Theethakattavae Sirantha
    Senn Ulakinimai Vittu,
    Poothalath Thukanthu Vantha
    Punnnniyanae, Yaesu Thaevaa.
    — Paathakan

    Saranangal

    1. Vanthurum Eppaavikalaiyum – Angakarikkum
    Maasillaatha Yaesu Naathanae,
    Unthan Idam Vanthulamae Uruki Aluthamaathu
    Munthimikach Seytha Paavam Muluthum Poruththaay Anto?
    — Paathakan

    2. Sinthina Un Uthiram Athae – Theeyon Maraththaich
    Sinnapinnam Seyya Vallathae;
    Pantham Ura Untan Valap Paakaamutta Kalvanaiyae
    Vinthaiyura Vaeratchiththa Vaethanae, Avvithamaayae
    — Paathakan

    3. Arpavisuvaasamulan Aam – Atiyaenai Ini
    Aatharippathaar? Un Thanjamae;
    Tharparaa, Unaith Tharisith Thanti Nampitaen, Enavae
    Seppina Thomaavukkuppol, Thiru Urukkaatchi Thanthu.
    — Paathakan

    Paathagan En Vinaitheer Song Lyrics Paathagan En Vinaitheer Song Lyrics Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.