Maha Maha Periyathu - மகா மகா பெரியது | Fr.S.J.Berchmans - Christking - Lyrics

    Maha Maha Periyathu - மகா மகா பெரியது | Fr.S.J.Berchmans


    மகா மகா பெரியது உம் இரக்கம்
    ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை

    தேற்றிடும் கிருபை
    உயிர்ப்பிக்கும் கிருபை
    விலகாத மாறாத கிருபை

    (கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம்
    கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள்
    மகா பெரியது. 2 சாமுவேல் 24:14)

    1. மிகக் கொடிய வேதனையில்
    இடுக்கண்கள் மத்தியில்
    விழுந்து விட்டேன் உம் கரத்தில் - 2
    கொள்ளைநோய் விலகனும்
    ஜனங்கள் வாழனும்
    உம் நாமம் உயரனுமே - 4

    உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

    (ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில்
    சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க்
    கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரெயர் 4:16)

    2. பெலவீனங்களைக் குறித்து
    பரிதவிக்கும் மிகப்பெரிய
    பிரதான ஆசாரியரே - 2
    ஏற்ற வேளை உதவி செய்யும்
    கிருபையை நான் நம்பியே
    கிருபாசனம் வந்திருக்கிறேன் - 4

    உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

    (பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப்
    பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு
    பெரிதாயிருக்கிறது. சங்கீதம் 103:11

    மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர்
    நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:11-12)

    3. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
    குற்றங்கள் அகற்றுகின்ற
    கிருபையுள்ள நல்ல தகப்பனே - 2
    பூலோகம் பரலோகம்
    எவ்வளவு உயர்ந்ததோ
    அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4

    உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

    (தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின்
    ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
    பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய
    கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. சங்கீதம் 33:18:19)

    4. திருப்பாதம் காத்திருந்து
    மன்றாடும் பிள்ளைகள் மேல்
    மனதுருகும் நல்ல தகப்பனே - 2
    பஞ்சத்திலே பசியாற்ற
    நோயிலிருந்து காப்பாற்ற
    நோக்கமாய் இருப்பவரே - 4

    உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

    English


    Maha Maha Periyathu - மகா மகா பெரியது | Fr.S.J.Berchmans Maha Maha Periyathu - மகா மகா பெரியது | Fr.S.J.Berchmans Reviewed by Christking on June 10, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.