Athikalayil - அதிகாலையில் | Joseph Aldrin - Christking - Lyrics

    Athikalayil - அதிகாலையில் | Joseph Aldrin


    அதிகாலையில் உம் கிருபையை கேட்கப்பண்ணும்
    நாள் முழுதும் நான் நடக்க பாதையை காட்டும்-3

    ஆத்துமாவை நான் உயர்த்துகிறேன்
    உம்மிடத்தில் நான் உயர்த்துகிறேன்-2

    இயேசையா நீரே என் தேவன்
    இயேசையா உம்மை நம்பியுள்ளேன்-2

    1.கைகளை உமக்கு நேராக விரிக்கின்றேன்
    (ஒரு) வறண்ட நிலம் போல் உமக்காய் தவிக்கின்றேன்-2
    உம் முகம் காணாமல் சோர்ந்து போவேன்
    உம் குரல் கேளாமல் துவண்டு போவேன்-2-இயேசையா

    2.பூர்வ நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்
    உம் செயல்களை எல்லாம் தியானித்து மகிழ்கின்றேன்-2
    உம் கிருபையை நினைத்து துதிக்கின்றேன்
    உம் உண்மையை எண்ணி உயர்த்துகிறேன்-2-இயேசையா

    3.உமது விருப்பத்தை அனுதினம் நான் செய்திட
    எனக்கு போதித்து நடத்திடும் என் தெய்வமே-2
    செம்மையான வழிகளிலே
    உம் நல்ல ஆவியால் நடத்திடுமே-2-இயேசையா

    English


    Athikalayil - அதிகாலையில் | Joseph Aldrin Athikalayil - அதிகாலையில் | Joseph Aldrin Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.