Maraividamae - மறைவிடமே | Bro. Ravi Immanuel - Christking - Lyrics

    Maraividamae - மறைவிடமே | Bro. Ravi Immanuel


    உன்னதரே உம்மறைவில்
    தங்கி வாழ்கிறேன்
    வல்லவரே உம் நிழலில்
    புகுந்து கொள்கிறேன்
    அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு
    புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு-2 - என்

    மறைவிடமே என் உறைவிடமே
    நான் நம்பியுள்ள என் கன்மலையே-2

    1.தீங்கு நாட்களில்
    என்னை மறைத்து கொள்கிறீர்
    உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர்-2
    கேடகம் நீரே என் மகிமையும் நீரே
    என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே-2

    மறைவிடமே என் உறைவிடமே
    நான் நம்பியுள்ள என் கன்மலையே-2

    2.உம்மை நோக்கி கூப்பிடும்போது
    எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர்-நான்-2
    ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர்
    என்னை தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர்-2

    மறைவிடமே என் உறைவிடமே
    நான் நம்பியுள்ள என் கன்மலையே-2

    3.நீதிமான்களை நீர் ஆசீர்வதிக்கிறீர்
    உம் காருண்யத்தினால்
    சூழ்ந்து கொள்கிறீர்-2
    இரட் சிப்பு நீரே என் இரட்சகர் நீரே
    நான் சுகமாய் வாழ காரணர் நீரே–2

    மறைவிடமே என் உறைவிடமே
    நான் நம்பியுள்ள என் கன்மலையே-2

    English


    Maraividamae - மறைவிடமே | Bro. Ravi Immanuel Maraividamae - மறைவிடமே | Bro. Ravi Immanuel Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

    No comments:

    Powered by Blogger.