Siluvaiyil Nilalil Anuthinam - சிலுவையில் நிழலில் அனுதினம் - Christking - Lyrics

    Siluvaiyil Nilalil Anuthinam - சிலுவையில் நிழலில் அனுதினம்


    சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
    சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ

    சிலுவையின் அன்பின் மறைவில்
    கிருபையின் இனிய நிழலில்
    ஆத்தும நேசரின் அருகில்
    அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்

    1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
    தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
    சிலுவையண்டை வந்ததினால்
    சிறந்த சந்தோஷங் கண்டதினால்
    இளைப்படையாது மேலோகில்
    ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்

    2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
    ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
    அவனியில் வியாகுலம் வந்தால்
    அவரையே நான் அண்டிக் கொண்டால்
    அலைமிக மோதிடும் அந்நாள்
    ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்

    3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
    இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
    திருமறை இன்னிசை நாதம்
    தேனிலுமினிய வேதம்
    தருமெனக்கனந்த சந்தோஷம்
    தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்

    Siluvaiyil Nilalil Anuthinam Atiyaan
    Saaynthilaip Paariduvaen - Aa Aa

    Siluvaiyin Anpin Maraivil
    Kirupaiyin Iniya Nilalil
    Aaththuma Naesarin Arukil
    Ataikiraen Aaruthal Manathil - Siluvaiyil

    1. Paavap Paarachchumaiyathaal Sornthu
    Thalarnthen Jeeviyamae Aa Aa
    Siluvaiyanntai Vanthathinaal
    Sirantha Santhoshang Kanndathinaal
    Ilaippataiyaathu Maelokil
    Aekuvaen Paranthae Vaekam - Siluvaiyil

    2. Evvitha Kotiya Idarukkum Anjaen
    Aesuvai Saarnthu Nirpaen - Aa Aa
    Avaniyil Viyaakulam Vanthaal
    Avaraiyae Naan Anntik Konndaal
    Alaimika Mothidum Annaal
    Aaruthal Alippathaaych Sonnaar - Siluvaiyil

    3. Inpam Suranthidum Thirumoli Kaettae
    Innalkal Maranthiduvaen - Aa Aa
    Thirumarai Innisai Naatham
    Thaeniluminiya Vaetham
    Tharumenakkanantha Santhosham
    Theerkkumen Ithayaththin Thosham - Siluvaiyil
    Siluvaiyil Nilalil Anuthinam - சிலுவையில் நிழலில் அனுதினம் Siluvaiyil Nilalil Anuthinam - சிலுவையில் நிழலில் அனுதினம் Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

    No comments:

    Powered by Blogger.