Anandamai inbacannan / ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Anandamai inbacannan / ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன் - Tamil Christian Songs Lyrics

    ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன்
    தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

    நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்
    நாதன் இயேசு என்னோடிருப்பார்

    சேற்றினின் றென்னைத் தூக்கி யெடுத்து
    மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
    கல்லான என் உள்ளம் உருகின கல்வாரியை
    கண்டு நன்றியுடன் பாடிடுவேன்

    வாலிப நாட்களில் இயேசுவைக் கண்டேன்
    வாஞ்சையுடன் என்னைத் தேடி வந்தார்
    எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
    இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்

    கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
    தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
    இயேசு அல்லால் ஆசை இப்ப10வினில் வேறே இல்லை
    என்றும் எனக்கவர் ஆதரவே

    உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
    உம்பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
    தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம் கிருபை
    கண்பாரும் என்றும் நான் உம் அடிமை

    தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
    ஆற்றிடுதே உந்தன் சமூகமே
    பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
    பேரின்ப சீயோனில் வாழ்ந்திடவே
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Anandamai inbacannan / ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன் - Tamil Christian Songs Lyrics Anandamai inbacannan / ஆனந்தமாய் இன்பக்கானான் ஏகிடுவேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.