Appa ummai naesekiraen / அப்பா உம்மை நேசிக்கிறேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Appa ummai naesekiraen / அப்பா உம்மை நேசிக்கிறேன் - Tamil Christian Songs Lyrics

    அப்பா உம்மை நேசிக்கிறேன்
    ஆர்வமுடன் நேசிக்கிறேன்

    எப்போதும் உம் புகழ்தானே
    எந்நேரமும் ஏக்கம் தானே
    எல்லாம் நீர் தானே – ஐயா

    பலியாகி என்னை மீட்டீரையா
    பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
    ஒளியாய் வந்தீரையா – ஐயா

    உந்தன் அன்பு போதுமையா
    உறவோ பொருளோ பிரிக்காதையா
    என் நேசர் நீர் தானையா – ஐயா

    கண்ணீர் துடைக்கும் காருண்யமே
    மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
    விண்ணக பேரின்பமே – அப்பா

    அநுதின எணவு நீர்தானையா – என்
    அன்றாட வெளிச்சம் நீர் தானையா
    அருட் கடல் நீர்தானையா – எனக்கு

    ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
    ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
    அருகதை இல்லையைய்யா – ஐயா

    ஜெபமே எனது ஜீவனாகணும்
    ஜெயக்கொடி எனது இலக்காகனும்
    ஊழியம் உணவாகணும்


    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Appa ummai naesekiraen / அப்பா உம்மை நேசிக்கிறேன் - Tamil Christian Songs Lyrics Appa ummai naesekiraen / அப்பா உம்மை நேசிக்கிறேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 04, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.