Aavi Aruluma Swami / ஆவியை அருளுமே சுவாமீ - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Aavi Aruluma Swami / ஆவியை அருளுமே சுவாமீ - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
    காயுர் கொடுத்த வானத்தினரசே

    சரணங்கள்

    1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
    நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
    முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
    முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? --- ஆவியை

    2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
    பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
    தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
    திட விசுவாசம் சிறிதெனுமில்லை --- ஆவியை

    3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
    திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
    பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
    பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் --- ஆவியை
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Aavi Aruluma Swami / ஆவியை அருளுமே சுவாமீ - Tamil Christian Songs Lyrics Aavi Aruluma Swami / ஆவியை அருளுமே சுவாமீ - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.