Adhikaliyillum Dheduvan / அதிகாலையிலுமைத் தேடுவேன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Adhikaliyillum Dheduvan / அதிகாலையிலுமைத் தேடுவேன் - Tamil Christian Songs Lyrics


    பல்லவி

    அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
    தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

    அனுபல்லவி

    இதுகாறும் காத்த தந்தை நீரே;
    இனிமேலும் காத்தருள் செய்வீரே,
    பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே,
    பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் , தேவே! --- அதிகாலை

    சரணங்கள்

    1. போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா!
    எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா!
    ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா?
    எனக்கான ஈசனே! வான ராசனே!
    இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! --- அதிகாலை

    2. பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது
    தப்பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது,
    விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது?
    விசுவாசங் கொண்டு மெய்ப் பாசமூண்டிட
    விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? --- அதிகாலை

    3. நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே!
    தீநாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே!
    பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே!
    புகழார நாதனே! வேத போதனே!
    பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! --- அதிகாலை
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Adhikaliyillum Dheduvan / அதிகாலையிலுமைத் தேடுவேன் - Tamil Christian Songs Lyrics Adhikaliyillum Dheduvan / அதிகாலையிலுமைத் தேடுவேன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 26, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.