Allaiteerae yesuvae / அழைத்தீரே இயேசுவே அன்போடே - Tamil Christian Songs Lyrics

    Allaiteerae yesuvae / அழைத்தீரே இயேசுவே அன்போடே - Tamil Christian Songs Lyrics

    அழைத்தீரே இயேசுவே அன்போடே என்னை அழைத்தீரே
    ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
    ஆயத்தமானேன் தேவே

    என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
    என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே
    என் துயர தொனியோ இதையார் இன்று கேட்பாரோ
    என் காரியமாக யாரை அழைப்பேன்
    என்றீரே வந்தேனிதோ

    என்னதான் தீங்கு நான் இழைத்தேன்
    என்னை விட்டோடும் என் ஜனமே
    எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ
    என்றே உறைத்தென்னை ஏங்கி அழைத்தீர்
    எப்படி நான் மறப்பேன்

    ஆதி விஸ்வாசம் தங்கிடவே
    ஆண்டவர் அன்பு பொங்கிடவே
    ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே
    நல் ப10ரண தியாகப் பாதை நடந்தே
    நன்றியுடன் உழைப்பேன்

    எந்தன் ஜெபத்தை கேட்டிடுமே
    ஏழை ஜனத்தை மீட்டிடுமே
    எந்தன் பிதா சித்தமே எந்தன் போஜனமும் அதுவே
    என் பிராணனைக்கூட நேசித்திடாமல்
    என்னையும் ஒப்படைத்தேன்

    ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
    ஆசாபாசங்கள் பெருகிடுதே
    ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
    ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
    ஆண்டவரே இரங்கும்

    பாக்கியமான சேவையிதே
    பாதம் பணிந்தே செய்திடுவேன்
    ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
    அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
    ஆண்டவரை அடைவேன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Allaiteerae yesuvae / அழைத்தீரே இயேசுவே அன்போடே - Tamil Christian Songs Lyrics Allaiteerae yesuvae / அழைத்தீரே இயேசுவே அன்போடே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.