Karthar En Meepar Adhinaala / கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Karthar En Meepar Adhinaala / கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே - Tamil Christian Songs Lyrics



    1. கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக்
    காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே

    2. புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் - நல்ல
    புனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார்

    3. ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப்
    பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார்

    4. மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் - அஞ்ச
    மாட்டேன் நானுமதினால் ஒருக்காலும்

    5. தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் - என்னைத்
    தேற்றும் உமது தடியும் கோலும்

    6. சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி - நீர்
    தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி

    7. சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி - அபி
    ஷேகம் செய்கிறீர் சகலமும் பூர்த்தி

    8. ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையுடன் - கிருபை
    சேர்ந்து தொடரும் என்னை செம்மையுடன்

    9. நேச கர்த்தருடைய வீட்டிலே நான் - மேவி
    நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Karthar En Meepar Adhinaala / கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே - Tamil Christian Songs Lyrics Karthar En Meepar Adhinaala / கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 02, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.