Maritha yaesu uyirthuvittar | மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா - Lyrics - Christking - Lyrics

    Maritha yaesu uyirthuvittar | மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா - Lyrics



    மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா
    மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா
    அல்லேலூயா ஜீவிக்கிறார்
    அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார்

    மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
    கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே
    யூத சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே
    சோர்ந்து போன மகனே நீ துள்ளி பாடிடு

    அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே
    இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்
    நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்
    நாள்தோறும் புது பெலனால் நிரம்பிடுவோம்

    கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம்
    கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார்
    கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்
    கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

    எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்
    இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார்
    அப்பம் பிட்டு கண்களையே திறந்து வைத்தார்
    அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்






    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
    Maritha yaesu uyirthuvittar | மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா - Lyrics Maritha yaesu uyirthuvittar | மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா - Lyrics Reviewed by Christchoir on July 14, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.