Vanjagan Valaivusukiraan - வஞ்சகன் வலை வீசுகிறான் : lyrics - Christking - Lyrics

    Vanjagan Valaivusukiraan - வஞ்சகன் வலை வீசுகிறான் : lyrics

    Vanjagan Valaivusukiraan

    வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2
    வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு
    விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு
    விதையை அறியாமல் அதை
    பொறுக்குவாரும் உண்டு – 2

    1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது
    போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது
    சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது
    மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது
    அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2

    2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது
    சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது
    சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை
    உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது
    அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2

    3. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்
    இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்
    இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும்
    இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல
    சபையை மாற்றிவிடும் முறைகளையும்
    வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து
    திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .

    Worship Songs Lyrics,
    Vanjagan Valaivusukiraan - வஞ்சகன் வலை வீசுகிறான் : lyrics Vanjagan Valaivusukiraan - வஞ்சகன் வலை வீசுகிறான் : lyrics Reviewed by Christking on April 27, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.