Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும் : Lyrics - Christking - Lyrics

    Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும் : Lyrics

    Then Inimaiyilum Yesuvin

    தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
    திவ்விய மதுரமாமே – அதைத்
    தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே

    1. காசினிதனிலே நேசமதாகக்
    கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
    கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
    கண்டுனர் நீ மனமே – தேன்

    2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
    தாமே ஈந்தவராம் – பின்னும்
    நேமியாம் கருணை நிலைவரமுண்டு
    நிதம் துதி என் மனமே – தேன்

    3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
    உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
    கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
    கருத்தாய் நீ மனமே – தேன்

    4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
    துணைவராம் நேசரிடம் – நீயும்
    அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
    ஆசை கொள் நீ மனமே – தேன்

    5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
    புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
    பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
    புகுவாய் நீ மனமே – தேன்

    Worship Songs Lyrics,David
    Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும் : Lyrics Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும் : Lyrics Reviewed by Christking on May 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.