Aagathathu Ethuvum Illai : Lyrics - Christking - Lyrics

    Aagathathu Ethuvum Illai : Lyrics


    ஆகாதது எதுவுமில்லை - உம்மால்
    ஆகாதது எதுவுமில்லை
    அகிலம் அனைத்தையும்
    உண்டாக்கி ஆளுகின்றீர்

    1. துதி செய்யத் தொடங்கியதும்
    எதிரிகள் தங்களுக்குள்
    வெட்டுண்டு மடியச் செய்தீர்
    உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்

    2.அலங்கார வாசலிலே
    அலங்கோல முடவனன்று
    நடந்தானே இயேசு நாமத்தில்

    3.கோலும் கையுமாக
    பிழைக்கச் சென்றார் யாக்கோபு
    பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்

    4. கண்ணீரைக் கண்டதாலே
    கல்லறைக்குச் சென்றவனை
    கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்

    5. எலியாவின் வார்த்தையாலே
    சாறிபாத் விதவை வீட்டில் - எண்ணெய்
    மாவு குறையவில்லையே

    6. ஜெப வீரன் தானியேலை
    சிங்கங்களின் குகையினிலே
    சேதமின்றிக் காப்பாற்றினீர்

    Songs Description :
    Song : Aakaathathu Ethuvumillai
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Aagathathu Ethuvum Illai : Lyrics Aagathathu Ethuvum Illai : Lyrics Reviewed by Christking on November 18, 2016 Rating: 5
    Powered by Blogger.