Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில் - Christking - Lyrics

    Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில்

    அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
    சிறுமை அடைந்தே தொங்குகிறார்

    1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
    கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
    மாய லோகத்தோடழியாது யான்
    தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே – அந்தோ

    2. அழகுமில்லை சௌந்தரியமில்லை
    அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
    பல நிந்தைகள் சுமந்தாலுமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே – அந்தோ

    3. அதிசயம் இது இயேசுவின் தியாகம்
    அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
    அதை எண்ணியே நிதம் வாழுவேன்
    அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே – அந்தோ

    4. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
    சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
    என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
    என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் – அந்தோ
    Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில் Antho Kalvariyil - அந்தோ கல்வாரியில் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.