Manan Thirumbum Paavikenrum - மனந்திரும்பும் பாவிக்கென்றும் - Christking - Lyrics

    Manan Thirumbum Paavikenrum - மனந்திரும்பும் பாவிக்கென்றும்

    மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
    மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே

    வந்தனமப்பா வந்தனமே

    திருச்சபை நடுவில் உமது பெயரைச்
    சொல்லியே பாடிடுவேன் - திருக்கரம்
    செய்திட்ட நன்மை நினைக்கிறேன்
    திருச்சபை நடுவில் உமது பெயரைச்
    சொல்லியே - உம்முடைய செயல்களெல்லாம்
    நினைக்கும் போது வியக்கிறேன்

    இரதங்களும் குதிரைகளும் எங்களை
    இரட்சிக்க முடியவில்லை - உம்மை
    விட்டால் எங்களுக்கு வேறே வழியில்ல
    இரதங்களும் குதிரைகளும் எங்களை
    இரட்சிக்க முடியவில்லை - உம்மை நம்பி
    வந்துவிட்டோமே வேறொரு நாமம் அறியவில்ல

    கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
    பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
    காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை
    கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
    பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே - என்னை
    விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே
    Manan Thirumbum Paavikenrum - மனந்திரும்பும் பாவிக்கென்றும் Manan Thirumbum Paavikenrum - மனந்திரும்பும் பாவிக்கென்றும் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.