O Pavankal Ethanai - ஓ பாவங்கள் எத்தனையோ - Christking - Lyrics

    O Pavankal Ethanai - ஓ பாவங்கள் எத்தனையோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் கைகள் புரிந்தனவோ
    நின் கைகளில் வழிந்தோடும் செங்குருதி
    என் கைகளைக் கழுவிடாதோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் கால்கள் புரிந்தனவோ
    நின் கால்களில் வழிந்தோடும் செங்குருதி
    என் கால்களைக் கழுவிடாதோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் இதயம் இழைத்ததுவோ
    நின் இதயத்தில் வழிந்தோடும் செங்குருதி
    என் இதயத்தை கழுவிடாதோ

    ஓ பாவங்கள் எத்தனையோ
    என் சிரசதும் எண்ணியதோ
    நின் சிரசில் வழிந்தோடும் செங்குருதி
    என் சிரசதை கழுவிடாதோ
    O Pavankal Ethanai - ஓ பாவங்கள் எத்தனையோ O Pavankal Ethanai - ஓ பாவங்கள் எத்தனையோ Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.