Seei Adaitharunam Ithari - சீர் அடைதருணம் இதறி மனமே
சீர் அடைதருணம் இதறி மனமே
சிதைவு படும் முனமே
சீர் அடை தருணம் இதறி மனமே
பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்
நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ - பேதாய்
நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ
கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து.
பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் - ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே
மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி(ரீ)
மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து

Reviewed by Christking
on
May 22, 2018
Rating:
No comments: